பொங்கல் பரிசு 3000.. வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
சென்னை: கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கவில்லை. அரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் வரப்போகும் சூழலில், பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 பணம் வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு பணம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கும். ஆனால் அதேநேரம் வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் வாங்க முடியுமா என்ற கேள்விகள் இருக்கும். அதுபற்றி பார்ப்போம்.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசு தொகுப்போடு 3000 முதல் 5000 வரை ரொக்கப் பணமும் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடந்த வாரம் பொங்கல் தொகுப்பு மட்டும் அறிவிக்கப்பட்டது. ரொக்கப்பணம் குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இதற்கிடையே பொங்கல் பரிசு தொடர்பாக ஜனவரி 4ம் தேதி முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறுகையில், "இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும், விவசாயிகளின் உழைப்புக்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உணவளித்து பசிப்பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாளாகும்.
பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட, தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், தலா ஒரு அட்டைதாரருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு நீளக்கரும்பு வழங்க, முதல்-அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். இந்த பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக மொத்தமாக ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் என 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 பேருக்கு பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பரிசு மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் வழங்கப்படும்.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி, சேலைகளும் அனைத்து ரேஷன் கடைகள் வழியாக வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது. அதேபோல்
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதால், பொங்கல் பரிசுக்கான டோக்கன் நேற்று முதல் வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
டோக்கன் பெற்றவர்கள் குறிப்பிட்ட தேதியில் அவர்களுக்கான ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க காலை மற்றும் மாலையில் தலா 100 பேருக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. இந்தப்பணி வருகிற 9-ந் தேதியில் இருந்து 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பொங்கல் பரிசு டோக்கன் வாங்காமல் வெளியூரில் வசிப்பவர்கள் நேரடியாக சென்று கடையிலேயே டோக்கன் பெற்று பொங்கல் பரிசு ரொக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும். வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள், சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல் எல்லா கடையிலும் ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசு வாங்க முடியாது.
அவர்களுடைய கடை, எங்கு உள்ளதோ அங்கு தான் போய் வாங்க வேண்டும். உதாரணத்திற்கு மதுரையில் ரேஷன் கார்டு உள்ள நபர், சென்னையில் வசிப்பார். அவர் மதுரையில் போய் தான் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தை வாங்க முடியும். பொங்கலுக்கு இரண்டு முன்பே சென்றால் பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கிவிட முடியும். வெளியூரில் வசிப்பவர்களுக்கு ஏதுவாக அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தை வாங்க வழி வகை செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications