தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு மேஜர் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலா பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்க அரசு ஆணை பிறப்பித்தள்ளது. இலவச வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொகுப்பு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மாவட்டங்களுக்கும் சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." இவ்வாறு அரைசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரொக்க பணம் உண்டா: பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் போது எல்லாம் ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப்பணம் பொங்கல் பண்டிகையின் போது அரசு வழங்கியது. அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் அரசு வழங்கியது.. ஆனால் இந்தமுறை பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்குவது குறித்து அரசு இன்னமும் அறிவிக்கவில்லை.. வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகளாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை குறித்து அறிவித்துள்ளது. எனவே பொங்கலுக்கு இந்தமுறை ரொக்கப்பரிசு உண்டா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தால் மட்டுமே அரசின் முடிவு என்ன என்பது தெரியவரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications