சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கல் பரிசுடன் ரூ. 2500 ரொக்கம் - இன்று முதல் டோக்கன் வீடு தேடி வரும்

பொங்கல் பரிசுடன் 2500 ரூபாய் வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும்.

Google Oneindia Tamil News

சென்னை: ரூ. 2500 பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் 30ஆம் தேதிவரை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    மக்களே.. ரேஷன் கார்டுடன் ரெடியாக இருங்க.. இன்று முதல் பொங்கல் பரிசு டோக்கன் வினியோகம்..!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடக்கி வைத்திருக்கிறார்.

    Pongal gift Rs. 2500 token distribution in door to door from today

    இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை வாங்க கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டாம். இன்று முதல் 30ஆம் தேதிக்குள் அவரவர் வீடுகளுக்கே நேரில் வந்து டோக்கனை ரேசன் கடை ஊழியர்கள் வழங்க உள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்களுக்கு ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளனர். முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என பிரித்து டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் ஜனவரி 4 முதல் 12-ம் தேதி வரையிலான நாட்களில் நியாய விலைக்கடைகள் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி, பிற்பகல் 1.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் செயல்படும். விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு ஜனவரி 13 அன்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோரை நெரிசலில் நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ரூ.2,500ஐ ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். ரொக்கப் பணத்தை ரூ.2,000 மற்றும் ரூ.500 தாளாக வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் ஐந்து 500 ரூபாய்களாக வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் அனுப்பப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது தொடர்பாக புகார்களுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். புகார்கள் இருப்பின் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The token for the Rs 2500 Pongal prize money and special package is to be distributed door to door from today. It has been announced that the token will be issued door to door till the 30th. You can go to the ration shops on the date mentioned in the token and get the Pongal gift package. The Pongal gift package will be distributed from January 4th to 13th.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X