உதயநிதி ஸ்டாலின் வீட்டில் ஓவர் நைட்டில் மாறிய சீன்! பசுமைவழிச்சாலையில் தமிழக அரசு திடீர் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் அதிகார மையமாகத் திகழும் சென்னை அபிராமபுரம் பசுமைவழிச்சாலையில் இப்போது உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.. அங்குள்ள அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் ஒன்றான "குறிஞ்சி" இல்லத்தில் வசித்து வரும் முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டு, பின்னர் சில மணி நேரங்களிலேயே மீண்டும் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே அரசு இயந்திரம் தனது பணிகளை வேகப்படுத்தியது.. இதன் ஒரு பகுதியாகத்தான், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தன..

Udhayanidhi Stalin

தமிழக அரசு பங்களாக்கள்

வழக்கமாகத் தமிழ்நாட்டில் அமைச்சர்களுக்கென ஒதுக்கப்படும் பங்களாக்கள் மிகவும் பிரம்மாண்டமானவை.. இவை வெறும் வீடுகள் மட்டுமல்லாமல், அமைச்சர்கள் தங்கள் தொகுதி மக்களைச் சந்திக்கத் தனி அலுவலகம், கோப்புகளை ஆய்வு செய்ய நவீன வசதிகள், உதவியாளர்கள் மற்றும் தனிச் செயலாளர்களுக்கெனத் தனித்தனி அறைகள் என ஒரு மினி தலைமைச் செயலகம் போலவே செயல்படும்..

உதயநிதி ஸ்டாலினுக்கும் இதேபோன்ற சகல வசதிகளுடன் கூடிய 'குறிஞ்சி' இல்லம் ஒதுக்கப்பட்டிருந்தது.. இந்த இல்லத்திற்கு 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டதால், நேற்று முன்தினம் உதயநிதி வீட்டிற்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு மொத்தமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் திடீர் மாற்றம்

அங்குப் பணியில் இருந்த போலீசாருக்கு ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டதால், அந்த இல்லம் அமைதியானது..

இன்னொரு பக்கம், பொதுப்பணித்துறை சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் 15 முதல் 20 நாட்களுக்குள் பங்களாக்களைக் காலி செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியானது..

பசுமை வழிச்சாலையில் அதிரடி

ஆனால், திடீரென பங்களாக்களைக் காலி செய்வது சிரமம் என்றும், குறைந்தது 2 மாச அவகாசம் வேணும் என்றும் அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.. பொதுவாக ஒரு புதிய அமைச்சரவை பதவியேற்ற 15 நாட்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை.. அதிகபட்சமாக 30 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படும்.

அதையும் தாண்டித் தங்க வேண்டும் என்றால், முறையான காரணம் சொல்லி பொதுப்பணித்துறைக்குக் கடிதம் கொடுக்க வேண்டும்.. நியாயமான காரணமாக இருந்தால் வாடகையுடன் மேலும் 2 மாசம் தங்க அனுமதி கிடைக்கு

திமுக - அதிமுக அரசியல்

இந்தச் சூழலில்தான் தவெக விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஆரம்பமானது.. மெஜாரிட்டியை திரட்டுவதில் சிக்கல் நீடிப்பதால் முதலமைச்சராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியும் தள்ளிப்போனது.. இந்த இடைவெளியில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்துப் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே ரகசியமாகப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன..

இந்தத் திடீர் அரசியல் மாற்றங்களால் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் நிலைப்பாட்டில் மீண்டும் ஒரு மாற்றம் வரலாம் எனக் கருதப்படுகிறது.. இதன் காரணமாகத்தான், உதயநிதி ஸ்டாலின் பங்களாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீர்னு மீண்டும் அவசரமாகப் பணிக்கு அழைக்கப்பட்டனர்..

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.. அவசர அவசரமாகப் பாதுகாப்புப் பணிக்காகத் திரும்பிய அவர்கள், இப்போது வழக்கம்போலக் 'குறிஞ்சி' இல்லத்தில் தங்கள் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்..

என்ன நடக்கிறது திமுகவில்?

பாதுகாப்பு விலக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் வழங்கப்பட்டிருப்பது, ஆட்சி அமைப்பதில் இருக்கும் ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்..

பசுமைவழிச்சாலையில் உள்ள மற்ற அமைச்சர்களின் பங்களாக்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வர்ணம் பூசவும், மின்சாதனப் பராமரிப்புப் பணிகளைச் செய்யவும் தயாராக இருந்த நிலையில், இந்தத் திடீர் போலீஸ் வருகை அவர்களைத் திகைக்க வைத்துள்ளது.

எப்படியும் 2 மாசம் கால அவகாசம் கிடைக்கும் என்று உதயநிதி தரப்பு எதிர்பார்ப்பதும், அதற்குள் அரசியல் களம் எந்தப் பக்கம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பும் சென்னை அரசியலை இப்போது சூடாக்கியுள்ளது.. இனி வரும் நாட்களில் பசுமைவழிச்சாலை பங்களாக்கள் யாருடைய வசம் இருக்கும் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+