நீங்க நல்லா இருக்கோனும்..பார்ட்டி ஃபண்டை கட் செய்த விஜய்! குஷியில் வீடுகட்டுவோர்..ராடாரில் ஆபீசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கட்டுமானத் துறையில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் இருந்ததாக கூறப்படும் "கட்சி நிதி வசூல்" முறைக்கு (பார்ட்டி ஃபண்ட்) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து புதிய கண்காணிப்பு அமைப்புகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக கட்டட அனுமதி வழங்கும் நடைமுறையும் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

Vijay Tamil Nadu Building Approval

இதுவரை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆய்வு செய்து இறுதி செய்த பல முக்கிய கட்டுமானத் திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு வந்தன. அந்த கோப்புகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அரசிடமே இருந்தது.

கட்டிட அனுமதி

கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த சிலர் நீண்ட காலமாக முன்வைத்து வந்த குற்றச்சாட்டு என்னவென்றால், திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததாகும். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் சில திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது சதுர அடியை அடிப்படையாகக் கொண்டு கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டது.

விஜய் அரசு

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்த நடைமுறையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, அடுக்குமாடி கட்டுமானத் திட்டங்களுக்கான பல கோப்புகளை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டிய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கே நேரடியாக அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுமானத் துறை

இதன் மூலம் கோப்புகள் பல்வேறு அலுவலகங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை குறையும் என்றும், திட்டங்களுக்கு விரைவாக அனுமதி கிடைக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதற்கிடையில் புதிய புகார்களும் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி நிதி வசூல் நிறுத்தப்பட்டாலும், சில இடங்களில் அதிகாரிகள் மட்டத்தில் தனிப்பட்ட முறையில் பணம் கேட்கப்படுவதாக கட்டுமானத் துறையினர் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நகர்ப்புற வளர்ச்சி

குறிப்பாக, கோப்புகளை விரைவாக பரிசீலனை செய்வது, ஆய்வு அறிக்கைகளை அனுமதிப்பது, தொழில்நுட்ப அனுமதிகளை வழங்குவது போன்ற செயல்முறைகளில் சிலர் முறைகேடாக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை புதிய கண்காணிப்பு அமைப்புகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. கட்டட அனுமதி வழங்கும் செயல்முறைகளை முழுமையாக கணினி மயமாக்குவது, ஆன்லைனில் கண்காணிப்பது, விண்ணப்பதாரர்களுக்கு நேரடி தகவல் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்சப் புகார்கள்

மேலும், அதிகாரிகள் மீது சிறப்பு கண்காணிப்பு ஏற்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. லஞ்சப் புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை நடத்தும் தனி அமைப்பு உருவாக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் நோக்கம் பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக அனுமதி பெறும் சூழலை உருவாக்குவதே என கூறப்படுகிறது.

ஊழல் தடுப்பு

அதேநேரத்தில், கட்டுமான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளில் எந்தவித தளர்வும் இருக்காது என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படும் நிலையில், கட்டட அனுமதி வழங்கும் நடைமுறையிலும் அதற்கான மாற்றங்கள் தொடரலாம் என்கின்றனர் கட்டுமானத்துறையினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+