அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்!
சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் கட்சி ஆரம்பித்தார்கள் இவர்களுக்கு அரசியல் நடத்த தெரியுமா? என தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் தேர்ந்த அரசியல் கட்சிகளைப் போல அடுத்தடுத்து பிற கட்சி நிர்வாகிகளை தட்டி தூக்கி வருகிறது தமிழக வெற்றி கழகம். அந்த வகையில் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு, வரும் சனிக்கிழமை தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கின்றனர். ஏற்கனவே ராஜினாமா செய்திருக்கும் விஜயபாஸ்கரும் நான்காவதாக தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகிறார் என்கின்றனர்.
இவர்களுக்கெல்லாம் கட்சி நடத்த தெரியுமா? அரசியல் செய்ய தெரியுமா? இருவரும் திராவிட கட்சிகளை வென்று விட முடியுமா? என 2024 அக்டோபர் மாதம் விஜய் கட்சி ஆரம்பித்தபோது பலரும் பேசினார்கள். 1967 1977 போல தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என விஜய் சொன்னபோது பலரும் கேலி சிரிப்பு சிரித்தது என்னவோ உண்மைதான்.

அது மட்டும் அல்லாமல் தேர்தல் முடிவுகளுக்கு முன் உத்தேச அமைச்சரவை பட்டியல் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட ஒரு பட்டியலை பார்த்து பலரும் நமட்டு சிரிப்பு சிரித்ததை மறந்து விட முடியாது.
தமிழக வெற்றிக் கழகம்
ஆனால் 2026 தேர்தல் களம் அப்படியே மாறியது. தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கிய போது திமுக முன்னிலையிலும் தவெக மூன்றாவது இடத்திலும் இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல தவெக முதலிடத்திலும், திமுக இரண்டாவது இடத்திலும் இருந்தது. வேறு எந்த கட்சிக்கும் தமிழக மக்கள் இடம் கொடுக்கவில்லை. தேர்தல் முடிவுகளின் போது 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது.
விஜய்
108 தொகுதிகளை வைத்துவிட்டு வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியுமா என பேசியபோது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தந்தன. தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். பிறகு தகுதி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நான்கு பேர் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
அதிமுக
இந்த நிலையில் அதிமுகவை அடித்து துவம்சம் செய்யும் நோக்கில் தான் விஜய் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குதிரை பேர குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என உயர்நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகி இருக்கிறது. கூடுதலாக நேற்று அதிமுகவின் விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். வரும் சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழகத்தில் அவர் இணையலாம் என சொல்லப்படுகிறது.
3 எம்எல்ஏ ராஜினாமா
இந்த நிலையில் தமிழக அரசுகளில் பரபரப்பை கூட்டும் வகையில் மேலும் மூன்று பேர் ராஜினாமா செய்யப் போகிறார்களாம். அதில் ஒருவர் அதிமுக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணையப் போகிறார். மற்ற இரண்டு பேர் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்கள் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டதால் அதிருப்தியில் இருக்கும் அந்த கட்சியின் தலைமை அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கிறது.
இடைத்தேர்தல்
பதவியை ராஜினாமா செய்து விட்டு தங்களது கட்சியின் சின்னத்திலேயே வரும் இடைத்தேர்தலில் போட்டியிடப் போகிறார்களாம். அதற்கான செலவுகளை தமிழக வெற்றி கழகம் கவனித்துக் கொள்ளும் என்கின்றனர். இது தொடர்பாக இரு கட்சி தலைமையும் பேசி முடிவு செய்துவிட்டதாம். இன்று அல்லது நாளைக்குள் அந்த இரண்டு எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்கின்றனர்.
எம்எல்ஏக்கள் யார்?
தற்போதைய சூழலில் ஆறு தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் இவர்கள் 3 பேரோடு சேர்த்து மொத்தம் ஒன்பது தொகுதிகள் காலியாகப் போகிறது. கூடுதலாக ஒரு தொகுதி என மொத்தம் பத்து தொகுதிகளில் தேர்தலை தமிழக வெற்றி கழகம் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு எம்எல்ஏக்கள் யார் என்பது தான் தற்போதைய கேள்விக்குறி.!
-
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
நீலாங்கரை சாலையில் திடீரென நின்ற முதல்வர் கான்வாய்.. சாலையில் இறங்கி மக்களை சந்தித்த விஜய்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்! -
ஜானை அனுப்புறேன்.. ராகுலிடம் சொன்ன விஜய்! தவெகவின் ரகசிய ஆயுதம் ஜான் ஆரோக்கியசாமி டெல்லி செல்கிறார்











Click it and Unblock the Notifications