தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியில் நடைபெற்ற நியாயவிலைக் கடை திறப்பு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தவெக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த சில திமுக நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறியதால், உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாங்குடி கிராமத்தில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எம்.பி. பரிந்துரையில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

புதிய கட்டடத்தை திறந்து வைக்க ப.சிதம்பரம் நேரில் வந்திருந்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், உள்ளூர் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்விடத்திற்கு வந்த ப.சிதம்பரம், ரிப்பன் வெட்டும் நிகழ்வின் போது தவெக இளைஞர்களை அழைக்குமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்விலும் தவெக நிர்வாகிகளை அழைக்குமாறு ப.சிதம்பரம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பேரில் தவெகவைச் சேர்ந்த இருவர் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றனர். இதனால் அதிருப்தியடைந்த சில திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை விட்டு வெளியேறி சாலையோரத்தில் நின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் நியாயவிலைக் கடையின் விற்பனையைத் தொடங்கி வைத்த ப.சிதம்பரம், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் சுருக்கமாக பதிலளித்தார். காங்கிரஸ் தேசிய தலைவர் பதவி தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாகவும், அந்தப் பதவி உங்களுக்கு கிடைக்குமா என்றும் கேட்கப்பட்டபோது, "கிடைத்தால் உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
மேலும், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை மூன்றில் இரண்டு மடங்காக உயரும் என கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டபோது, "உயராது" என்று மட்டும் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய திமுக நிர்வாகிகள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். "இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸுக்கு துணையாக இருந்தது நாங்கள்தான். ஆனால் தற்போது எங்களை புறக்கணித்து, தவெகவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாளை அவரது மகனுக்காக வாக்கு கேட்க வர வேண்டியது எங்களிடம்தானே?" என அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். மாங்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications