வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிரியாக கருதப்படும் விஜய்யிடம் சென்று சரணடைவதை விட உயிரை விடுவது மேல் என விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகியதை விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், தனது சொந்த நலன் கருதியும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவும் அவர் கட்சி மாறியிருக்கிறார் என்றும், சொத்துகளை எல்லாம் கட்சிக்கு விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சி. விஜயபாஸ்கர் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். விரைவில் அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சி விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

RB Udhayakumar Slams C Vijayabaskar Says Better to Die Than Surrender to Vijay

எடப்பாடியின் காலை பிடித்து கிடந்தவர்

"விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, நீண்ட நாட்களாக அரங்கேறி வந்த அரசியல் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிமுக மூலம் பெற்ற அரசியல் செல்வாக்கு, பதவிகள் மற்றும் வசதிகளை கட்சிக்கே திருப்பி வழங்கிவிட்டு அவர் வேறு கட்சிக்கு செல்லத் தயாரா? தனது சொந்த நலன் கருதியும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவும் அவர் கட்சி மாறியிருக்கிறார்.

எங்களது வயிறு எரிகின்றது. 10 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமியின் காலை பிடித்து விஜயபாஸ்கர் எத்தனை எத்தனை விஷயங்களை சாதித்திருக்கிறார். அதிமுகவில் இருந்து ஒவ்வொருவராக போய்க்கொண்டே இருப்பீர்கள், நாங்கள் வாயை மூடி மவுனமாக இருக்கனுமா?, அதிமுகவில் இருந்து தவெக சென்றவர்கள் நாய் மாதிரி கேட்டில் காத்து கிடந்தார்கள்.. விஜயபாஸ்கருக்கு சூடு, சொரனை உள்ளதா? சோறில் உப்பு போட்டு தான் சாப்பிடுகிறாரா?, எதிரி விஜய்யிடம் சரணாகதி ஆவதை விட செத்து போய் விடலாம்..

காலம் இதற்கு சரியான பதிலை வழங்கும்

அதிமுகவை விட்டு வெளியேறிய அவரை கட்சித் தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்? இந்த செயல் எங்களை வேதனை அடையச் செய்கிறது. விஜயபாஸ்கர் செயலை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆன்மா மன்னிக்காது. சொத்துகளை எல்லாம் கட்சிக்கு விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? 54 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அதிமுக, அதன் தொண்டர்களை நம்பியே தொடர்ந்து பயணிக்கிறது. கட்சியை விட்டு செல்ல நினைப்பவர்கள் ஒரே நேரத்தில் செல்லட்டும். வாரம் ஒருவராக கட்சி மாறி, அதிமுக பலவீனமடைந்து வருவதாக ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டாம்.

தேர்தலுக்கு முன்பு ஏன் அவர்கள் தவெகவில் சேரவில்லை? தேர்தல் முடிந்த பிறகே ஏன் கட்சி மாறுகிறார்கள்? அதிமுக போன்ற பெரிய கட்சிக்கு இப்படி நடந்தால், தவெகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். காலம் இதற்கு சரியான பதிலை வழங்கும்" என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர் ட்வீட் பதிவு

அதிமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "என் இதயம் கனிந்த வேதனையுடனும் மனக்கசப்புடனும் இந்த இயக்கத்தில் இருந்து விலகுகிறேன். இது ஒரு கட்சியை விட்டு விலகுவது மட்டுமல்ல. என் வாழ்க்கையின் முக்கியமான ஒரு அத்தியாயத்தை முடிப்பது போன்றது. இந்த முடிவால் ஏற்பட்ட மனவேதனையை வார்த்தைகளால் விளக்க முடியாது. இருந்தாலும், நான் என் மக்களுக்காகவும் என் மண்ணுக்காகவும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். அரசியல் பயணத்தில் என் சேவை வழக்கம்போல தொடரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தவெகவில் சேர்கிறாரா விஜயபாஸ்கர்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி வருகிறார்கள். இசக்கி சுப்பையா உள்பட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். அந்த வரிசையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை அதிகாரப்பூர்வமாக நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இந்த ராஜினாமா தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக விராலிமலை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அவர் தவெகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அது அக்கட்சிக்கு அரசியல் பலத்தை அளிக்கும் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+