பொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்
சென்னை: வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்கு முன்னதாக பொங்கல் பரிசு மக்கள் கைக்கு கிடைத்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போல் வரும் ஆண்டிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்புதுண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு குடும்ப அட்டை தாரர்களுக்கு வரும் ஆண்டும் வழங்கப்பட உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு வழங்கப்படும் அறிவிப்பினை கடந்த மாதம் 29ம் தேதி கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட துவக்க விழாவில் அறிவித்தார்.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கொள்முதல்
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடி ரேசன் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிப்பதற்காக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து வந்தது.

செவ்வாய் நிறைவு
இவற்றை கொள்முதல் செய்யும் பணி முடிந்து விட்ட நிலையில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக பாக்கெட் போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் செவ்வாய்கிழமை முடியும் என்று சொல்கிறார்கள்.

கூட்டுறவு வங்கி
இதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயாராக உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பினை வருகிற புதன்கிழமை இருந்து ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறதாம்.

பொங்கல் பரிசு
அதன்பிறகு பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 20-ந்தேதி வழங்க அரசு உத்தரவிட வாய்ப்பு உள்ளதாம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

தடை இல்லை
எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம்- பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரேஷன் கடைகளில் எழுதி ஒட்டி வைக்கப்பட உள்ளதாம். இதன் மூலம் கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் வாங்கி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாம். ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டமாக நடக்க உள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க எந்த தடையும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

உங்கள் கையில் ஆயிரம்
ஏனெனில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக ஏற்கனவே இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துவிட்டதால் தடைகள் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தேர்தலுக்கு முன்பே கைக்கு கட்டாயம் வர வாய்ப்பு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications