பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ. 3000 ரெடி.. டோக்கன் அச்சடிக்கும் பணி தீவிரம்.. உள்ளே என்ன இருக்கும்?
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக டோக்கன் அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கனில் முக்கியமான விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்டவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறுகிறது.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு - 2026 டோக்கனில்,
கடையின் பெயர் :
கு.அட்டைதாரர் :
பெயர் :
கு.அட்டை எண் :
கிராமம் / தெரு :
டோக்கன் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில், ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அரசு பொங்கல் பண்டிகைக்கான கரும்பு கொள்முதலை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திற்குப் பிறகு மட்டுமே தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகை
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இம்முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ரூ.3,000 வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இதனால் பெரிய நிதிச் சுமை இருக்காது என முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், விவசாயத்திற்கும் மனித குலத்திற்கும் நன்றி செலுத்தும் முக்கிய பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் வகையில், ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை பரிசு
முதலில் பரிசாக ரூ.5,000 வழங்க தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் திட்டமிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பரிசு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என தகவல் வெளியானது.
இருப்பினும், தமிழகத்தின் அதிகரித்துவரும் நிதி பற்றாக்குறை, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பல நலத்திட்டங்கள், மானியங்கள், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் போன்ற காரணங்களால் நிதி சவால்கள் அதிகரித்தன. இதன் விளைவாக, ரூ.5,000-க்கு பதிலாக ரூ.3,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரைக்க, முதல்வர் ஸ்டாலின் அதனை ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மக்கள் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளனவா என்பதை அறிய முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய கள ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு நேரடியாக வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் பேசும்.
பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி போன்ற நலத்திட்டங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளதா என விசாரித்து, ஒரு படிவத்தின் மூலம் விவரங்களைச் சேகரிப்பார்கள். படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும், இதன் மூலம் கோரிக்கை நிலையை அறிய முடியும். மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணவும், அல்லது அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாகவும் திமுக தரப்பு முன்வைக்கும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications