Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல்: சென்னையில் இருந்து படையெடுக்கும் மக்கள்.. இதுவரை அரசு பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் பேர் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டுமே வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 668 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொடர் விடுமுறை விடப்படுவதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, நகரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் திரளாக சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.

Kilambakkam tn government bus Pongal 2026

பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் ஜனவரி 14ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 9 ஆம் தேதி முதலே ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதற்காக ஜனவரி 9 முதலே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 668 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நேற்று மட்டும் மொத்தம் 2,760 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. ஜனவரி 11 ஆம் தேதி நிலவரப்படி பொங்கலையொட்டி இதுவரை இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த இரு நாள்கள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+