பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களே.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. நாளை முன்பதிவு தொடக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக வரும் ஜனவரி 8 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாளை (4 ஆம் தேதி) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என அறிவித்துள்ளது.
நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனால், பண்டிகை நாட்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
1. நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06011) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) தாம்பரத்தில் இருந்து இரவு 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
2. கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06054) வருகிற 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06053) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி வந்துசேரும்.
3. திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06156) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06055) வருகிற 09 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
4. திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06158) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06057) வருகிற 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) செங்கல்பட்டில் இருந்து மதியம் 5 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி வந்துசேரும்.
5. கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06034) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு. அடுத்த நாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06033) வருகிற 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு கோயம்புத்தூர் வந்துசேரும்.
6. போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06024) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) போத்தனூரில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06023) வருகிற 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வந்துசேரும்.
7. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06070) வருகிற 8 ஆம் தேதி அன்று (வியாழக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06069) வருகிற 09 ம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை திருநெல்வேலி வந்து சேரும்.
8. ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06025) வருகிற 13 ம் தேதி அன்று (செவ்வாய்க்கிழமை) ஈரோட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06026) வருகிற 14ம் தேதி அன்று (புதன்கிழமை) செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு போத்தனூர் புறப்பட்டும்.
9. ராமேசுவரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06106) வருகிற 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06105) வருகிற 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் (புதன்கிழமை) தாம்பரத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
10. மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06125) வருகிற 13 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மங்களூரில் இருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06105) வருகிற 14 ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 4.15 மணிக்கு புறப்பட்டு. அதே நாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு வந்து சேரும்.
இந்த ரயில்களை பயன்படுத்தி, பொங்கல் பண்டிகைக்கு சொந்து ஊர் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications