பண்டிகையை கொண்டாடுங்களே.. இன்று சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கிளம்பும் சிறப்பு ரயில்கள்!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை, நாகர்கோவில், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுறது சிறப்பு ரயில்.
பொங்கல் பண்டிகையையொட்டி, 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பண்டிகையை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். தெற்கு ரயில்வே சார்பில் முக்கிய வழித்தடங்களில் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் சேவை இன்று (ஜனவரி 11) இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத மெமு ரயில் சேவை மற்றும் கோவை வழியாக சென்னை - மதுரை இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று காலை 10.45 மணிக்கு, சென்னை எழும்பூர் - மதுரை இடையே முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06109) சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 07.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06110) மதுரையில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 4.40 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
இந்த ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, திருச்சி, மணப்பாறை, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், அரியலூர், திண்டிவனம், மேல்மருவத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் வழியாக சென்னை - மதுரை இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 3 மணிக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் (06067) சென்னையில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் ஜனவரி 12 அன்று இரவு 7 மணிக்கு, மதுரை - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06068) மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் புறப்படும் சிறப்பு ரயில் (06067), நாளை காலை 5 மணிக்கு, மதுரையை சென்றடையும்.
இந்த ரயில், திருப்பூரை இன்று இரவு 10:20 மணிக்கும், கோவையை, 11:20 மணிக்கும் வந்தடையும். மறுமார்க்கத்தில், 12 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (06068), அடுத்த நாள் காலை 9:20 மணிக்கு, சென்னையைச் சென்றடையும். இந்த ரயில், கோவையை 12 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கும், திருப்பூரை, 13 ஆம் தேதி நள்ளிரவு 12:18 மணிக்கும் அடையும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications