பொங்கலுக்கு சர்ப்ரைஸ்.. நாளை முதல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்! ரேஷன் கடைகள் மூலம் அரசு ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பாண்டு 2.20 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 249.76 கோடி ரூபாய் செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு வழங்க உள்ளது. இந்த பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன்கள் நாளை முதல் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளது.

பரிசுத் தொகுப்பு என்றாலே ரொக்கப்பணமும் கிடைக்கும் என்ற தமிழக மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.. கடந்த காலங்களில் ரூ.1,000, ரூ.2,500 என்றெல்லாம் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த வருடமும் ரொக்கம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

pongal gift tokens ration card holders

ஆனால், அப்படி எதுவுமே அறிவிக்கப்படவில்லை.. அதேபோல, முந்திரி, பாசி பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களும் இல்லை... எனினும், இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

விநியோகம்:
பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசுக்கு 249.76 கோடி ரூபாய் செலவாகும் என தெரிகிறது. அந்தவகையில், 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை அதாவது ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி, அனைத்து மாவட்டங்களிலும் விநியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

அநேகமாக இன்றைக்குள் அப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், நாளை 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது..

டோக்கன்கள்:
பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கனில் இடம்பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று ஏற்கனவே கூட்டுறவு துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

நேற்றுகூட, அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்..

காவல்துறை:
அதில், "பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசு தொகுப்புகள் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். பரிசு தொகுப்பு விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து, ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தவகையில், பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம், டோக்கன் எண் விவரங்கள் அடங்கிய டோக்கன் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்கவே இப்படி டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது

நாளை விநியோகம்: இந்த டோக்கன்கள் விநியோகம் நாளை தொடங்க உள்ள நிலையில், ரேஷன் பணியாளர்கள், நாளை முதல், கார்டுதாரர்களின் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்க உள்ளனர். டோக்கனின் குறிப்பிட்டுள்ள நாளில், ரேஷன் கடைகளுக்கு சென்று, பொதுமக்கள் பரிசு தொகுப்பு பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+