உப்புமா கிடையாது.. காலை உணவு திட்டத்தில் இனி சாம்பாருடன் பொங்கல்.. சட்டசபையில் அறிவிப்பு!
சென்னை: "வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் காலை உணவில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது" என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட துறை மீதான விவாதங்கள் நடைபெற்றன. துறை அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அப்போது பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மேலும், மகளிர் உரிமைத் துறை, வீட்டு மனை பட்டா, விடியல் பயணம் என்று பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக கூறினார்.
காலை உணவு திட்டத்தில் மாற்றம்
மேலும் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், வரும் கல்வி ஆண்டு முதல் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.
மேலும், குறிப்பாக, காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வகுப்பறை ஈடுபாடு மற்றும் அதிகரித்து உள்ளதாக திட்டக் குழு ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
புதுமைப்பெண் திட்டம் - தோழி விடுதிகள்
மேலும், புதுமைப் பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 இடங்களில் புதிதாக தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாக கூறிய அவர், மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications