சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவில் நேருவுக்கு இணையான மாநில பதவி.. மகனுக்கு மாவட்டம்.. பொன்முடி கேட்கிறாராமே!

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் ஒவ்வொரு காலத்திலும் மூத்த தலைவர்கள் தலைமைக்கு எதிராக அதிருப்தி குரலை வெளிப்படுத்துவது தொடர்கிறது. இந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திராவிடர் கழகத்தில் இருந்து திமுகவுக்கு வந்தவர் பொன்முடி. வந்த வேகத்திலேயே விறுவிறுவென ஏறுமுகம் கண்டார் பொன்முடி. கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற கையோடு திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் மாறினார்.

ரஜினிகாந்த் வாழ்த்தால்...திமுகவுக்கு எந்த வரவும் இல்லை...ஆர்எஸ் பாரதி!! ரஜினிகாந்த் வாழ்த்தால்...திமுகவுக்கு எந்த வரவும் இல்லை...ஆர்எஸ் பாரதி!!

கருணாநிதி- பொன்முடி-ஸ்டாலின்

கருணாநிதி- பொன்முடி-ஸ்டாலின்

கடந்த லோக்சபா தேர்தலில் மகன் கெளதம சிகாமணிக்கு சீட் வாங்க பெரும் போராட்டம் நடத்தினார். இருந்த போதும் கருணாநிதி அளவுக்கு பொன்முடியின் நெருக்கம் ஸ்டாலினுடன் இல்லை என்பது அவ்வப்போது அரசல் புரசலாக வரும். ஒரு கட்டத்தில் பாஜக பக்கம் பொன்முடி தாவப் போகிறார் என்றும் செய்திகள் வந்தன.

சட்டசபை வளாக மோதல்

சட்டசபை வளாக மோதல்

இதனால் செம கடுப்பில் இருந்ததாம் திமுக தலைமை. அப்போது சட்டசபை வளாகத்தில் மறைந்த அன்பழகனுக்கும் பொன்முடிக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. பொன்முடியை வெறுப்பேற்றி இருந்தார் ஜெ. அன்பழகன். இதனை எதுவுமே திமுக தலைமை கண்டுக்காமல் இருந்தது. இதனால் பொன்முடி சிறிதுகாலம் அதிருப்தியில் இருந்தார்.

பொன்முடிக்கு மாநில பொறுப்பு?

பொன்முடிக்கு மாநில பொறுப்பு?

தற்போது சட்டசபை தேர்தலை முன்வைத்து திமுகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் திமுக முகமாக இருந்த நேரு, மாநிலப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இதே பாணியில் பொன்முடியையும் மாநிலப் பொறுப்புக்கு மாற்ற விரும்புகிறது திமுக. ஆனால் இதை உடனே ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் தரப்பு இல்லையாம்.

Recommended Video

    தனித்து போட்டியிட்டாலே பாஜக 60 தொகுதியில் வெல்லும் - எல் முருகன்
    திமுக தலைமைக்கு பொன்முடி நிபந்தனைகள்

    திமுக தலைமைக்கு பொன்முடி நிபந்தனைகள்

    திருச்சி நேருவுக்கு சமமான மாநில பொறுப்பு, மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி என்கிற இரு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறாராம் பொன்முடி. இதனை கட்சி தலைமை ஏற்றால் தாம் மாநில பொறுப்புக்கு வரத்தயார் என்பதுதான் பொன்முடியின் நிலைப்பாடு என கூறப்படுகிறது.

    English summary
    Sources said that Former Minister Ponmudi also will move to DMK party Statelevel Post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X