பொன்முடி மட்டுமல்ல.. இன்னும் பலர் வரிசையா வருவாங்க.. அண்ணாமலை போட்ட லிஸ்ட்
சென்னை: பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை திமுகவை புரட்டிப்போடும் என்று கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் பலர் இந்த லிஸ்டில் இருப்பதாக கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையோடு 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இது ஆரம்பம்தான் இன்னும் நிறைய பேருக்கு ஊழல் வழக்கில் தண்டனை கிடைக்கும் என்று கூறினார்.
அமைச்சர் ஒருவர் இலாகா இல்லாத அமைச்சராக நீண்ட நாட்களாக புழல் சிறையில் இருக்கிறார். இந்தியாவே பார்த்துக்கொண்டிருக்கிறது. தற்போது மூத்த அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பொன்முடி நீண்ட காலமாக திமுகவில் பதவியில் இருக்கிறார். அவர் இப்போது குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் வருகிறார்கள். இது ஆரம்பம்தான் என்று கூறியுள்ள அண்ணாமலை 2024ஆம் ஆண்டு மத்தியில் இன்னும் சில அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அண்ணாமலை கூறினார்.
அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அது திமுகவை பாதிக்கும். இது தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமான தண்டனை மட்டுமல்ல என்று கூறினார் அண்ணாமலை. செந்தில் பாலாஜியில் ஆரம்பித்து வரிசையாக வரும். அடுத்தடுத்து வரக்கூடிய வழக்கின் தீர்ப்புகளும் இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கு நன்றி.. தமிழ்நாட்டில் இதுபோன்ற நீதிபதிகள் இருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொன்முடி தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அதில், மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு…
— K.Annamalai (@annamalai_k) December 21, 2023
ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில் முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என்றும் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications