பொன்முடி சரணடையாவிட்டால் கைது செய்ய உத்தரவு.. கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? நீதிபதி சொன்னதென்ன?
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி ஜனவரி 22ஆம் தேதிக்குள் சரணடையாவிட்டால் இருவரையும் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆட்சி மாறிய உடன் காட்சிகள் மாறின 2011ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி மீது புகார் எழுந்தது.

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, இருவரையும் கடந்த 2016ஆம் ஆண்டில் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறைகடந்த 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 19ஆம் தேதி பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் எனஅறிவித்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக இருவரும் நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் கூட்டத்தால் நீதிமன்ற அறை நிரம்பி வழிந்தது. பொன்முடியும், அவரதுமனைவி விசாலாட்சியும் காலை 9.50 மணிக்கு வந்து காத்திருந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன் 10.30 மணிக்கு வந்தார். பொன்முடியும், விசாலாட்சியும் கைகூப்பி வணங்கினர்.
அப்போது நீதிபதி தண்டனை தொடர்பாக எதுவும் கூற விரும்புகிறீர்களா? என்று கேட்டார். பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இருவரது மருத்துவ அறிக்கைகளையும் தாக்கல் செய்தார்.
நீதிபதியிடம் பேசிய பொன்முடி.. நான் நிரபராதி. எனக்கு 73 வயதாகிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். போதிய சாட்சிகள் இல்லாததால் எங்கள் இருவரையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்,
என்று கேட்டுக்கொண்டார். அவரது மனைவி விசாலாட்சியும் நானும் நிரபராதி. எனக்கு 68 வயதாகிறது. மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு நீதிபதி ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(1)(இ)-ன்கீழ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி (64.90 சதவீதம்) அளவுக்கு சொத்து குவித்ததாக இருவர் மீதான குற்றச்சாட்டும் அரசு தரப்பில் சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழமை நீதிமன்றம் இதை சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்றார்.
இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்த தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில், இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,
நீதிபதி: தண்டனையை நிறுத்திவைக்க முடியாது. இருவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும், பொன்முடி அமைச்சர் என்பதாலும் அவர்கள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஜனவரி 22-ம் தேதிக்குள் சரணடையாவிட்டால் இருவரையும் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் கணவர் இதய நோயாளி.அவரை உடன் இருந்து கவனிக்கவேண்டி உள்ளதால், தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று பொன்முடியின் மனைவி விசாலாட்சி கேட்டுக்கொண்டார்.
அதை கேட்ட நீதிபதி,பொன்முடி உயர்கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பதால் குற்றத்தின் தன்மையை பார்த்துதான் தீர்ப்பளித்துள்ளேன். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, உங்கள் குறைகளை முறையிடலாம் என்று தெரிவித்தார்.
அப்போது இந்த வழக்கில் பொன்முடியின் சொத்துகளை முடக்குவது தொடர்பாக கடந்த 2011ஆம் ஆண்டில் நீங்கள் தமிழக சட்டத் துறை செயலராக இருந்தபோதுதான் உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள் என்று என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்
அதற்கு நீதிபதி, அதுதொடர்பாக என்கவனத்துக்கு எதுவும் கொண்டுவரப்படவில்லை. இதை முன்பேநீங்கள் சுட்டிக்காட்டியிருந்தாலும்கூட, இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பாக நடந்த நிகழ்வு அது என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்துக்கு கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஜனவரி 2ஆம் தேதிதான் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே, சரணடையும் கெடுவை 60 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று என்.ஆர். இளங்கோ கேட்டுக்கொண்டார்.
அதற்கு நீதிபதி ஒருவேளை, அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமானால், மீண்டும் இந்த நீதிமன்றத்தை நீங்கள் நாடலாம் என்று தெரிவித்தார். ஜனவரி 22ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இருவரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் கீழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications