ஆஹா.. இதுக்கெல்லாம் ஒரு மனசு வேண்டும்.. விசிக மனதை குளிர வைத்த பொன்முடி.. கவனிச்சு பார்த்தீங்களா?
சென்னை: விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளராக ரவிக்குமார் களமிறக்கப்பட்டு உள்ள நிலையில் விசிக மனதை அமைச்சர் பொன்முடி குளிர வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. திமுகவின் அடுத்தடுத்த மூவ்கள் அதிமுகவை அதிர வைத்துள்ளது. முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு திமுக தேர்தல் வேலைகளை அறிவித்து உள்ளது.

2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்!
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
விசிக - திமுக கூட்டணி: மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.
லோக்சபா தேர்தல் 2024ல் கூட்டணி வைப்பதற்கு திமுகவிடம் முக்கியமான சில கோரிக்கைகளை விசிக கட்சி வைத்து வந்தது. அதன்படி இந்த முறை 3 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் விசிக கேட்டதாக கூறப்படுகிறது.
திமுகவிடம் 3ல் 1 தனி தொகுதி, 2 பொதுத்தொகுதி வேண்டும் என்றும் விசிக கேட்டதாக கூறப்படுகிறது. அதோடு 3லும் பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சி கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 2 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது.
2 தனித்தொகுதிகளில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று விசிக அறிவித்துள்ளது. இரண்டிலும் பானை சின்னத்தில் விசிட் போட்டியிடுகிறது.
போட்டி: சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளராக ரவிக்குமார் களமிறக்கப்பட்டு உள்ள நிலையில் விசிக மனதை அமைச்சர் பொன்முடி குளிர வைத்துள்ளார்.
விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, அமைச்சர் பொன்முடியின் காரில் பானை சின்னம் ஒட்டப்பட்டு உள்ளது. காரின் முன் பக்கம், பின் பக்கம் என்று இரண்டிலும் பானை சின்னம் ஒட்டப்பட்டு உள்ளது.
அமைச்சர் பிரச்சாரம்: லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்காக ஆளும் திமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் , அமைச்சர் பொன்முடியின் காரில் பானை சின்னம் ஒட்டப்பட்டு உள்ளது.
திமுக கூட்டணி: விசிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி முயன்று வந்தார். அதிலும் அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம். அவர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும். வராவிட்டால் 'Dont care' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக அழைப்பு விடுத்தார்.
அதேபோல் அதிமுகவின் மற்ற தலைவர்களும் கூட்டணிக்கு விசிகவை அழைத்தனர். ஆனால் அது எதுவும் பயன் அளிக்கவில்லை. விசிக திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications