மீண்டும் லைம் லைட்டுக்கு வரும் பொன்முடி! மாநில பதவி தர ஸ்டாலின் முடிவு?
சென்னை: பட்டை, நாமம் போன்ற சைவ, வைணவ மதச் சின்னங்களை விலைமாதருடன் ஒப்பிட்டுப் பேசியதால் கட்சி மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்த பொன்முடிக்கு மீண்டும் மாநில பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
சுருக்கமாகச் சொல்லப்போனால், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கை மீண்டும் ஓங்கியிருப்பது அப்பகுதியில் உள்ள நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க திமுக முனைப்புக் காட்டி வருகிறது. இதற்கு முத்தாய்ப்பாக, கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்த ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், பொதுமக்களைத் தரக்குறைவாகப் பேசும் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது, அவர்களின் பதவியைப் பறிப்பது, இலாக்கா மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பட்டியலினத்தவர்
அந்த வகையில், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசியதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, "ஓசியில் போவதாக" விடியல் பயணம் குறித்துப் பொன்முடி பேசியிருந்த நிலையில், அது குறித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் கவலை தெரிவித்தார்.
பொன்முடியின் பெயர்
பொன்முடியின் பெயரைச் சொல்லாமல், "விடிந்தும் விடியாமலும் யார் எந்தப் பிரச்சினையை இழுத்து வருவார்கள் என்பதை நினைத்தால் தூக்கமே வரவில்லை" என முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்திருந்தார்.
பால்வளத் துறை
இதையடுத்து, பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர், பொது இடத்தில் தொண்டரைக் கல்லால் அடிக்கப் பாய்ந்த வீடியோ வைரலான நிலையில், அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தொடர்ந்து விழுப்புரம் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்ததால், அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடி
பொன்முடி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், உயர்கல்வித் துறையிலிருந்து வனத்துறைக்கு இலாக்கா மாற்றப்பட்டது. எனினும், "பட்டை, நாமம்" என மதத்தின் சின்னங்களை விலைமாதருடன் ஒரு நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசியிருந்தார்.
திமுக எம்பி கனிமொழி கண்டனம்
இதை திமுக எம்.பி. கனிமொழியே கண்டித்திருந்தார். பின்னர், அவருடைய அமைச்சர் பதவியும், கட்சியின் பதவியும் பறிக்கப்பட்டது (திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார்). அதுபோல், பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கும் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை.
கருணாநிதி காலத்து சீனியர்
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்தே சக்திவாய்ந்த நிர்வாகியாக இருந்து வந்த பொன்முடியின் பதவியைப் பறித்ததால் சில நிர்வாகிகள் மகிழ்ந்தனர். மற்ற நிர்வாகிகளின் பெயர் வெளியே தெரியாமல் தானே தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தது பொன்முடிக்கு எதிராக முடிந்தது.
ஸ்டாலின்- பொன்முடி
கட்சிப் பதவி பறிக்கப்பட்டதுமே முதல்வர் ஸ்டாலினைப் பொன்முடி சந்திக்க நினைத்திருந்தார். ஆனால், அவர் மறுத்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அண்மையில் முதல்வர் ஸ்டாலினைப் பொன்முடி சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
ஓரணியில் தமிழ்நாடு
இந்த நிலையில், விழுப்புரம் பகுதியில் "ஓரணியில் தமிழ்நாடு" எனும் இயக்கம் குறித்து முதல்வர் அறிவித்துள்ளார். இதில் விழுப்புரம் பகுதியில் "ஓரணியில் தமிழ்நாடு" எனும் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு விரைவில் மாநில அளவிலான பதவி மீண்டும் வழங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications