அப்துல் காலம் விஜயகாந்த்திற்கு தந்த பெரும் பொறுப்பு! யாருக்கும் தெரியாத ரகசியம்! நெகிழ்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், சில நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் டாப் இடத்தில் இருந்தவர் விஜயகாந்த். தமிழ் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இருந்த போதே அரசியலில் இறங்கியவர் விஜயகாந்த்.

 Ponraj shared Vijayakanth meeting with Abdul kalam and explains what happened then

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் நேற்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடலுக்குத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாம் உதவியாளர்: இதற்கிடையே விஜயகாந்த் குறித்து சில நெகிழ்ச்சி தகவல்களை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பகிர்ந்துள்ளார். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பிறகு பேசிய பொன்ராஜ், "விஜயகாந்த் இழப்பால். இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவரை நெஞ்சில் வைத்து பொற்றி கொண்டு இருக்கிறது. அழுது கொண்டு இருக்கிறது. கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறது. விஜயகாந்த் அன்புள்ளம் கொண்ட ஒரு பண்பாளர். மக்களை நேசித்த ஒரு மாமனிதர்.

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்.. அப்படியே ஸ்தம்பித்த சென்னை சாலைகள்.. லைவ் மேப் பாருங்கள்

மக்களுக்காக அரசியலுக்கு வந்து உழைத்தவர். அரசியல், மக்கள் நலன் சார்ந்த கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படையாகச் சொல்லி அரசியலில் தடம் பதித்தவர். எம்ஜிஆருக்கு பிறகு அரசியலில் சாதித்த ஒரு நடிகர் விஜயகாந்த் தான். நமது நாட்டின் 11ஆவது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் உடன் விஜயகாந்த் வந்து கலாமை சந்தித்தார். அப்போது தான் நானும் விஜயகாந்த்தை முதல்முறையாகச் சந்தித்தேன்.

அப்துல் கலாம் தந்த பொறுப்பு: அப்போது அப்துல் கலாம் தற்சார்பு கிராமத்தை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்களை விஜயகாந்த்திடம் கொடுத்தார். அதைப் பற்றி நான் விஜயகாந்த்திடம் விளக்கினேன். விஜயகாந்த்தும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் கட்சி தொடங்கும் போதும் சரி, தேர்தல் அறிக்கை வெளியிடும் போதும் சரி அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அப்போது தான் அவரது அன்பு உள்ளம் எனக்குப் புரிந்தது. மக்களுக்காக கண்ணீர் சிந்தக் கூடிய நபர் அவர்.

எந்த நடிகர் வந்தாலும் வயிறார சாப்பாடு போட்டுத் தான் விஜயகாந்த் அனுப்புவார் என்பார்கள். நான் தேர்தல் அறிக்கை தயார் செய்வது தொடர்பான சமயத்தில் அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது நான் சாப்பிட்டுவிட்டுத் தான் போக வேண்டும் என வலியுறுத்தி, சாப்பிட வைத்தவர் அவர். மக்கள் நலனைச் சார்ந்தே எப்போதும் சிந்தித்த நபரை நாம் இழந்துள்ளோம். அவர் உயிருடன் இருந்த வரை அவரது அருமை நமக்குப் புரியவில்லை. அவர் போன பிறகு இன்று துன்பப்படுகிறோம்.

ஒரு சரித்திரம்: பிறப்பு ஒரு நிகழ்வாக இருக்கலாம்.. ஆனால் இறப்பு ஒரு சரிதமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கூறியிருந்தார். அதுபோல விஜயகாந்த் மரணம் இன்று ஒரு சரித்திரமாகப் பதிவாகியுள்ளது. மக்கள் இதயங்களில் குடிகொண்டு இருந்த ஒருவரை நாம் இழந்துள்ளோம்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த்தின் நேர்மை, துணிச்சல், அரசியல் தெளிவு ஆகியவற்றை தேமுதிக தொடர்ந்து எடுத்துச் செல்லும் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+