பஸ் எல்லாம் மொத்தமாக இடமாற போகுது.. ஹாட் ஸ்பாட்டாக மாறும் புது பஸ் ஸ்டாண்ட்.. ரெடியான குத்தம்பாக்கம்
சென்னை: 427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பூந்தமல்லியில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னையில் உள்ளூர் அளவிலான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
MTC பூந்தமல்லியில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு 150 பேருந்துகளை மாற்றி இணைப்பை மேம்படுத்தும். பூந்தமல்லி டெப்போவில் 120 மின்சார பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.
முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் 3ம் வாரம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடைசி கட்ட சீரமைப்புகள் நடக்கின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன. ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.
இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.
ஐடி நிறுவனம்: இந்த நிலையில்தான் இங்கே பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம்: கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பேருந்து நிலைய தூய்மை: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications