இஞ்சி,பூண்டு மட்டுமல்ல.. கண்ணீர் விட வைக்கும் காய்கறிகள் விலை.. அச்சத்தில் இல்லத்தரசிகள்
சென்னை: இஞ்சி, வெள்ளைப்பூண்டு விலை உச்சத்திற்கு போன நிலையில் காய்கறிகளின் விலை உயர்வும் இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைக்கிறது. வீட்டு பட்ஜெட்டில் பெரும் பற்றாக்குறை ஏற்படுவதாக கவலைப்படுகின்றனர் இல்லத்தரசிகள்.
பலசரக்கு கடைக்கு போனால் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை அச்சப்பட வைக்கிறது. காய்கறிகள் கடைக்கு போனால் உச்சத்திற்கு போன விலை உயர்வால் கண்ணீர் வர வைக்கிறது. இல்லத்தரசிகளும் நடுத்தர மக்களும் எந்த பொருளை வாங்கி எப்படி சாப்பிடுவது என்று கலங்கிப்போய்தான் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை கிலோவிற்கு 12 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு ரூபாய் 540க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு அதிக அளவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பூண்டு விலை குறைவாக இருந்தது அதிகபட்சமாக ஒரு கிலோ 250 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது சில்லறை விலையில் கிலோ 540 ரூபாய் வரை விற்பனையாகிறது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 டன்னுக்கு மேல் பூண்டு வந்தது. அது தற்போது 40 டன் ஆக குறைந்துவிட்டது. இதுதான் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.
காய்கறிகளின் விலையும் மளமளவென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பச்சை பட்டாணி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் புடலங்காய் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஒரே ஆறுதல் வெங்காயம் விலைதான். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பனியின் தாக்கம் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த சில நாட்களாக அவரைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications