அந்த போஸ்டிங்.. ஆம்ஸ்ட்ராங் பதவிக்கு மோதும் புள்ளிகள்.. புகாருடன் தயாரான பொற்கொடி! பரபர பஜகுன் சமாஜ்
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.. கட்சி பொறுப்பிலிருந்தும் பொற்கொடி விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் பொற்கொடி.. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, தன்னை நீக்குவதாக சொல்வது பொய் என்றும் அது பற்றி கட்சி தலைமைக்கே தெரியாது என்று கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆவேசமாக கூறியிருக்கிறார.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த வருடம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் இறந்ததுமே, மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம் செய்யப்பட்டார்.

உட்கட்சி பூசல்கள்
எனினும், உட்கட்சி பூசல் நிலவிவந்ததாக தெரிகிறது.. போன நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த பூசல் பூதாகரமாக வெடித்துவிட்டது.. பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை, பொற்கொடி நேரில் சந்தித்து பேசினார்.. அப்போது மாநில தலைவர் ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொற்கோடி மேலிட பிரதிநிதிகளிடம் புகார் கூறினார்..
மேலிட தலைவர்களை சந்திக்க பொற்கொடியுடன் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டு சென்றிருந்தனர். அப்போது பொற்கொடியை, மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மேலிடப் பிரதிநிதிகளிடம் மனு வழங்கி முழக்கமிட்டனர். இதனால் கட்சிக்குள் மிகப்பெரிய பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.
பொற்கொடி அதிர்ச்சி
இந்தநிலையில், பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார் பொற்கொடி.. பகுஜன் சமாஜ் வெளியிட்டிருந்த அந்த அறிவிப்பில், "பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தை மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து கொள்வார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார்.. இனிமேல் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார். ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களின் திறனுக்கு ஏற்றாற்போல் அவர்கள் கட்சிப் பணிகளை தொடர்வார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடைசிவரை உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையின் கீழ் கட்சியை வலுப்படுத்தவும், அனைத்து தேர்தல்களை எதிர்கொள்ளவும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து உழைக்க வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
தலைமைக்கே தெரியாது
இந்த அறிவிப்பானது, பொற்பொடி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதையடுத்து, பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் பொற்கொடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..
அப்போது, "ஆம்ஸ்ட்ராங் வழக்கை நடத்துவதாக சொல்லி மாநில தலைவர் பதவிக்கு வந்த ஆனந்தன், சரிவர வழக்கை நடத்தவில்லை. அவர் தன்னிச்சையாக தலைமைக்கு தெரிவிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுபற்றி தங்களுக்கு தெரியாது என கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.. விரைவில் செயற்குழுவை கூட்டி நல்ல முடிவு எடுப்போம்.
குடும்பத்தையும், குழந்தையையும் மட்டும் கவனித்து கொள்ளுமாறு சொல்வது நியாயமா? கட்சியின் லெட்டர் பேட் இல்லாமல், வெறுமனே அவதூறு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட ஜெய்சங்கர் ,. ஆனந்தன் மீது காவல்துறையில் புகார் தரப்படும்.. அவர்கள் 2 பேர் மீதும் சட்டப்படி நடிவடிக்கை எடுக்கப்படும்.. என்னை வீட்டிலேயே இருக்க சொல்றாரு, கேஸையும் பார்க்க சொல்றாரு.. அப்ப அவர் எதுக்கு பதவிக்கு வந்திருக்கார்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பொற்கொடி.
மாநில தலைவர் மீது புகார்?
பதவி பறிப்பும், அதற்கு பொற்பொடியின் பதிலடிகளும் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.. கடந்த வாரம் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கே, பொற்கொடிக்கு அழைப்பு இல்லையாம்.. அதேபோல, அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம். எனினும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜீ கவுதம், முன்னாள் எம்.பி. ராஜாராம் ஆகியோரை பொற்கொடி நேரடியாக சென்று சந்தித்தார்..
அப்போதுதான், மாநில தலைவராக உள்ள ஆனந்தன், தங்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொற்கொடி புகாரும் தந்தார்.. இதனால் இருதரப்புக்கும் இடையே அப்போதே மோதல் ஏற்பட்டது. இந்த தகவல் மாயாவதிக்கும் சென்றுள்ளது. எனினும் திடீரென பொற்கொடியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்து, தன்னை நீக்குவதாக சொல்வது பொய் என்றும் அது பற்றி கட்சி தலைமைக்கே தெரியாது என்றும் பொற்கொடி கூறியிருப்பதால், பகுஜன் சமாஜ் கட்சிக்குள் புயல் வீசிக் கொண்டிருக்கிறது..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications