பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி
சென்னை: தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் அதன் முக்கிய கூட்டணி கட்சியான விசிகவிற்கும் இடையே புகைச்சல்கள் ஆரம்பமாகியுள்ளன. மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்குத் தகவல்களைத் திரட்டுவது போல, மாநில உளவுத்துறையும் கள நிலவரங்களை உடனுக்குடன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தாக்கல் செய்து வருகிறது. இதில் விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய நகர்வுகள் திமுக தலைமையைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தேர்தல் கள நிலவரங்கள் குறித்து மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை யினர் ரிப்போர்ட் அனுப்புவது போல, திமுகவுக்கு மாநில உளவுத்துறை அதிகாரிகள் ரிப்போர்ட் அனுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், திமுகவோடு பல விஷயங்களின் முரண் பட்டு நின்றார் விசிக தலைவர் திருமாவளவன். அதனையெல்லாம் சரிசெய்த திமுக தலைமை, கடந்த வாரம் திருமா எடுத்த 2 முடிவுகளை ரசிக்கவில்லை.
விசிக திருமாவளவன்
அதாவது, காட்டுமன்னார்கோயிலில் திருமா போட்டியிடுவதாக அவரே அறிவித்த விசயமும், சென்னையிலுள்ள திரு.வி.க.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் படுகொலை செய்யப்பட்ட பட்டியலினத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியின் வெற்றிக்கு திருவா வாழ்த்து சொன்ன விசயமும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உறுத்தலாக இருந்தது.
எம்.பி.யாக இருக்கும் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பின் பின்னணி குறித்து அமைச்சர் ஏ.வ.வேலு மூலம் அறிந்து, திருமாவுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் சில அறிவுறுத்தல்களை திமுக தலைமை கொடுத்தது.
குறிப்பாக, எம்.எல்.ஏ. எலெக்ஷனில் நீங்கள் போட்டியிடுவது உங்களின் உரிமை. ஆனால், உங்களின் வெற்றிக்கு திமுக எந்த உத்தரவாதத்தையும் தரமுடியாது என கட் அண்ட் ரைட்டாக திருமாவுக்கு உணர்த்தப்பட்டதாக விபரமறிந்த உடன்பிறப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்தே, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்டாராம் திருமாவளவன்.
பொற்கொடியை ஆதரித்தது தவறா?
அதேசமயம், அதிமுக பொற்கொடியை ஆதரிக்கும் முடிவிலிருந்து அவர் மாறவில்லை. அதாவது, அதிமுக பொற்கொடிக்கு வாழ்த்து சொன்னதன் மூலம், அவரை ஆதரியுங்கள் என திரு.வி.க. நகர் தொகுதியிலுள்ள தனது விசிக கட்சியினருக்கு மறைமுக உத்தரவை திருமாவளவன் சொல்வதாக முதல்வரின் கவனத்துக்கு மாநில உளவுத்துறை ஒரு தகவலை தந்திருக்கிறதாம்.
அதேபோல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இதே ரீதியில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதாக காங்கிரஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், திருமாவளவன் மீதான நெருடல் அறிவாலயத்திற்கு குறையவில்லை என்றே தெரியவில்லை.
திமுக எடுத்த சர்வே
இந்த சூழலில்தான், தமிழகத்தில் திருமாவுக்கு ஆதரவாக இருக்கும் பட்டியலின சமூகத்தினரின் வாக்குகள் அப்படியே அவருக்கு ஆதரவாக இருக்கிறதா? அல்லது பிரிகிறதா? என ஒரு சர்வேயை திமுக எடுத்துப் பார்த்துள்ளது.
உளவுத்துறையின் மூலமாக இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், திருமாவை ஆதரித்து நின்ற அவரது சமூக வாக்குகளில் 50 சதவீதம் விஜய் கட்சிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக, அச்சமூகத்தின் இளைஞர்களும் முதல்முறை வாக்காளர்களும் இந்த முறை மாற்றி யோசிக்கிறார்கள். அது விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது என்று ஸ்டாலினுக்கு தகவல்களை பாஸ் செய்திருக்கிறார்கள்.
இந்த பின்னணியில் ஆராய்ந்து பார்க்கும் போது," விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி என்பது கடினமாக இருக்கும்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..!!
- எழில்
-
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications