Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 11 ஆண்டுகளாக முடங்கி கிடந்த மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது.

மதுரவாயல் - துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2010ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அதன்பின் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.

மதுரவாயல் பாலம்

மதுரவாயல் பாலம்

2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

நிறுத்தம்

நிறுத்தம்

தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது.முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது. அதோடு கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

மீண்டும் தொடங்கும்

மீண்டும் தொடங்கும்

இந்த நிலையில் சென்னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாலை போக்குவரத்து துறை மத்திய இணை அமைச்சர் விகே சிங் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இன்று மதியம் 12.30 மணிக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மொத்த திட்டத்தின் மதிப்பு 5885 கோடி ரூபாய் ஆகும்.

இன்று ஒப்பந்தம்

இன்று ஒப்பந்தம்

இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே. அதேபோல்தான். ஆனால் இதில் இரண்டு மேம்பாலங்களும் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும்.

இரட்டை பாலம்

இரட்டை பாலம்

சர்வதேச நாடுகள் பலவற்றில் இது போன்ற பாலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற இரட்டை பாலங்கள் பயன்படுத்தப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இன்று ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் இதற்கான கட்டுமானம் தொடங்கும்.

Recommended Video

    கல்குவாரி விபத்து.. காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு!
    எவ்வளவு தூரம்

    எவ்வளவு தூரம்

    இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+