ஆபத்து! சென்னைக்கு வரும் குடிநீரால் சுகாதார சீர்கேடு? சுடுகாடான போரூர் ஏரி! எரியும் சடலங்கள்!
சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியில் ஒரு பகுதியில் சுடுகாடு அமைத்து அங்கு சடலங்களை எரிப்பதும் புதைப்பதுமாக இருப்பதால் அங்கிருந்து சென்னைக்கு வரும் குடிநீரை பருகுவதன் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இந்த ஏரியில் குப்பைகளும் கொட்டப்படுகிறது.
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது போரூர் ஏரி. இது ரெட்டேரி என்றும் அழைக்கப்படுகிறது. சென்னையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் 1995 ஆம் ஆண்டு முதல் இந்த ஏரியில் குளிப்பது, துணி துவைப்பது, நீச்சல் அடிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏரி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. போரூர் ஏரி கால்வாய் சீரமைப்பு பணிகள் ரூ 100 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 250 ஏக்கர் ஆகும். இங்கு 4 வடிப்பான்களை கொண்டு 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தண்ணீர் விநியோகம்: இந்த ஏரியிலிருந்து கோடம்பாக்கம், ஆலந்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 6 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட ஏரியில் குப்பைகளை கொட்டுவது மட்டுமல்லாமல், சடலங்களை எரிப்பதும், புதைப்பதும் என ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா எனும் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: இந்த ஏரியானது மதுரவாயல் டூ தாம்பரம் பைபாஸ் சாலையில் சென்றால் கடல் போல் அழகாக காட்சியளிக்கும்.
எத்தனை உடல்கள்: இந்த இடத்தில் இதுவரை எத்தனை உடல்கள் தகனம் செய்யப்பட்டன என்பது எண்ணிக்கையில் உறுதியாக தெரியவில்லை. ஆனால் மதுரவாயல் டூ தாம்பரம் பைபாஸ் சாலையில் செல்லும் போது இங்குள்ள சுடுகாடு நன்றாகவே தெரியும். இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில் ஏரி படுகையில் உடல்களை எரிப்பதால் நிலத்தடி நீரில் மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குடிநீர் ஆதாரமாக செல்லும் போது மக்கள் நோய் வாய்ப்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்கக் கூடாது என்கிறார்கள்.
இது குறித்து அந்த தொகுதிக்குள்பட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறுகையில் ஏரியின் மேற்கு பக்கத்தில்தான் இது போன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள மக்களால் இந்த பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது. இது ஒரு கிறிஸ்துவ சுடுகாடு இருக்கும் பகுதியாகும். இந்த பகுதியில் சடலங்களை எரிப்பதையும் புதைப்பதையும் பார்த்த பிறகு இவர்களுக்கு ஆயில் மில் ரோடு பகுதியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு: ஆனால் அவர்கள் இதை பயன்படுத்துவதில்லை. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை சுற்றுச்சுவர் போட்டு பாதுகாக்கப்படும். ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் முழு அளவையும் மீட்டு விடலாம் என்றார். அது போல் இது குறித்து மதுரவாயல் எம்எல்ஏ கணபதி கூறியிருப்பதாவது: ஏரியை மீட்க ரூ 20 கோடியில் ஒரு செயல்திட்டத்தை சிஎம்டிஏ தயாரித்து வருகிறது.
போராட்டம்: இந்த 20 கோடி ரூபாயில் ஏரியை ஆழப்படுத்துதல், சுற்றுச்சுவர் கட்டுதல், மரங்களை வளர்த்தல், நடைப்பயிற்சிக்கான நடைபாதை அமைத்தல், உட்காரும் இருக்கைகளை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படும். ஏரி நிச்சயம் பாதுகாக்கப்படும் என்றார். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத நீர் வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது100-க்கும் மேற்பட்ட வீடுகள் ஏரி பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. சுடுகாட்டை தொட்டால் அங்குள்ள உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்துவார்கள். ஏரிக்கு வேலி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட இடங்கள் சுற்றுச்சுவர் போட்டு பாதுகாக்கப்படும் என குமரகுருபரன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications