சென்னை கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்.. 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
சென்னை: பக்ரீத் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து, மக்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலயில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை கிளாம்பாக்கத்தில் 2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் நெரிசல் குறையவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து வெளியூர் செல்லவும், பண்டிகை முடிந்து வெளியூரிலிருந்து சென்னை திரும்புவதற்கும் மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட, பயணிகள் இதனை மறுத்துள்ளனர். பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும், குறைந்த அளவில்தான் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 6ம் தேதி இரவு சென்னை கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் லட்சக்கணக்கில் பயணிகள் கூடினர். ஆனால் அவர்கள் செல்லும் ஊருக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இப்படி இருக்கையில், விடுமுறை முடிந்து தற்போது சென்னைக்கு மக்கள் திரும்ப தொடங்கியுள்ளளனர்.
இதனால் கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மக்கள் சென்னை திரும்பியதால் இந்த நெரிசல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கிளாம்பாக்கம் மட்டுமல்லாது விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதியிலும் கடும் நெரிசல் ஏற்பட்டிருந்தது. தனியார் பேருந்துகள் மற்றும் கார்களால் இந்த நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனவே குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்குள் வர முடியாமல் மக்கள் தவித்துள்ளனர்.
இந்த நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக தனியார் வாகனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு இரண்டு கார்கள் அடைத்துக்கொள்ளும் இடத்தில் ஒரு பேருந்தை நிற்க வைக்கலாம். ஆனால் பேருந்தில் 50 பேரை வரை பயணிக்க முடியும். காரில் 4-8 பேர் வரை மட்டுமே பயணிப்பார்கள். எனவே போதுமான அளவில் அரசு பேருந்துகளை அதிக அளவில் இயக்குவதன் மூலமும், சனி ஞாயிற்று கிழமைகளில் கூடுதல் ரயில்களையும் இயக்குவதன் மூலமும் நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.
இதற்கு மாற்றாக புதிய சாலைகளை போடுவது, மேம்பாலங்களை கட்டுவது போன்ற திட்டங்களால் பெரிய அளவில் பலன் இருக்காது. இது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தாது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை!












Click it and Unblock the Notifications