முதலில் தபால் வாக்குகள்தான்.. நடைமுறையை மாற்றக் கூடாது.. தேர்தல் ஆணையத்தில் திமுக அவசரமாக மனு
சென்னை: வரும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வழக்கம்போல் முதலில் தபால் ஓட்டுக்களையே எண்ண வேண்டும் என்றும், தபால் ஓட்டுக்களை எண்ணி முடித்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 7 ம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 04 ஆம் தேதி நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தான், வாக்கு எண்ணிக்கையின் போது வழக்கமாக கடைபிடிக்கும் நடமுறையையே பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
அதாவது, முதலில் தபால் ஓட்டுக்களை எண்ணி அதன் முடிவையே அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. தபால் ஓட்டுக்களை எண்ணி முடித்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு திமுக எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணைய விதிகளின் படி வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தபால் வாக்குகளையே எண்ண வேண்டும். அதன்பிறகே இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண ஆரம்பிக்க வேண்டும். இந்த நிலையில், தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பாக ஒரு செய்தி அறிக்கை வெளியனாது.
அதில், இறுதியாகத்தான் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று கொடுத்து இருந்ததாகவும் எனவே வழக்கமான முறையின் படி தபால் வாக்குகளையே முதலில் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி இந்த மனுவை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் நடைமுறை அடிப்படையில் தபால் வாக்குகளை எண்ணி, அதன்பிறகு அரை மணி நேரத்திற்கு பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறை. அதில் குழப்பம் எதுவும் இருக்க கூடாது.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள கொடுத்த செய்திக்குறிப்பினால், முகவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications