Postal Voting: யாரெல்லாம் தபால் வாக்கு அளிக்கலாம்.. தபால் வாக்களிப்பது எப்படி.. இதோ முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்துவது எப்படி, யாரெல்லாம் தபால் வாக்கு செலுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் பரபரக்க ஆரம்பித்துள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடிக்கு நேரில் செல்ல முடியாத வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்துவது வழக்கம்.

இந்த தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்கும் முறை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அந்த நடைமுறை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தபால் வாக்கு செலுத்தும் நடைமுறை
85 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், வீட்டில் இருந்து கொண்டே சிகிச்சை பெறுபவர்கள் தபால் மூலம் வாக்கு செலுத்தும் வசதியைப் பயன்படுத்தலாம்.
தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 5 நாட்களுக்குள் தகுதியான வாக்காளர்கள் படிவம் 12டி-ஐ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து உங்களுடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
பின்னர், அதிகாரிகள் நேரடியாக வாக்காளரின் வீட்டிற்கு சென்று தபால் வாக்கு சீட்டை வழங்கி வாக்குப் பதிவு செய்ய உதவிபுரிவார்கள்.
உடல்நிலை அல்லது பார்வை குறைபாடு காரணமாக வாக்களிக்க முடியாதவர்கள், ரகசிய ஒப்புதலுடன் மற்றொருவரின் உதவியைப் பெறலாம்.
மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய நிலையை உறுதிப்படுத்தும் அரசு சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications