கட்டாய காத்திருப்பில் இருந்த IPS அதிகாரிகள் திஷா மிட்டல், தீபா சத்யனுக்கு மீண்டும் போஸ்டிங்! பின்னணி
சென்னை: கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 2 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் பணியிடம் வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையராக இருந்த திஷா மிட்டல் கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவரை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

கடந்த மாதம் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பல ஆயிரங்கள் செலவு செய்து டிக்கெட் வாங்கியும், டிக்கெட் விற்பனையில் குளறுபடியால் கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே செல்ல முடியாததால் ரசிகர்கள் பலர் கொந்தளித்தனர். இசை நிகழ்ச்சியைக் காண உள்ளே சென்ற ரசிகர்களும், கூட்ட நெரிசலால் குழந்தைகளை தொலைத்து அவதிப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் சில பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்கு வெளியே போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிந்தது. போக்குவரத்தை நெறிப்படுத்துவதில் போலீசார் சரிவரச் செயல்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சென்னை கிழக்கு துணை ஆணையர் திஷா மிட்டல் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல, பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யனும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்தம்பித்தது. இதன் காரணமாக அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோரும் மருத்துவமனைகளுக்கு சென்றோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அண்ணாமலை போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்பதாலும் திஷா மிட்டலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளான திஷா மிட்டல், தீபா சத்யன் ஆகிய இருவருக்கும் தற்போது போஸ்டிங் போடப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பணி நியமனம் செய்தும் தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த முன்னாள் சென்னை கிழக்கு இணை ஆணையர் திஷா மிட்டல், டெக்னிக்கல் சர்வீசஸ் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த தீபா சத்யன், சென்னை காவல்துறை தலைமையகத்தில் ஏ.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications