Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரேத பரிசோதனையில் முக்கிய திருப்பம்.. சித்ரா கொலை செய்யப்படவில்லை, தற்கொலைதான்.. போலீஸ் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா உடலுக்கு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு சோதனை நடைபெற்றது. அவர் தற்கொலை செய்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    சென்னை: சித்ராவின் மரணம் தற்கொலைதான்.. பிரேத பரிசோதனையில் உறுதி..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழ் பெற்ற, நடிகை சித்ரா, நசரத்பேட்டை அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதனால் முகத்தில் காயம் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் எழுந்துள்ளன.

    திருமணம்

    திருமணம்

    கடந்த ஒன்றரை மாதங்கள் முன்பு ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சித்ரா. தொழிலதிபரான ஹேமந்த் மற்றும் சித்ரா இருவரும் நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கரையான்சாவடி பகுதியில் உள்ள ஹேமந்த் வீட்டில் தங்காமல் ஏன் ஹோட்டலில் தங்கினார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

    பெற்றோருடன் மோதல்

    பெற்றோருடன் மோதல்

    ஆம்.. ஹேமந்த் பெற்றோருடன் சித்ராவுக்கு தகராறு ஏற்பட்டதால்தான் இவர் நட்சத்திர ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஹேமந்த் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில்தான் சித்ரா மரணமடைந்துள்ளார். குடும்ப பிரச்சினைகள் பல இருப்பதால் இது கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கோட்டாட்சியர் விசாரணை

    கோட்டாட்சியர் விசாரணை

    இந்த நிலையில்தான் நேற்று திருவள்ளூர் ஆர்டிஓ, லாவண்யா, சித்ரா உடல் வைக்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலை பார்வையிட்டார். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் முடிவடையவில்லை என்பதால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று பிரேத பரிசோதனை

    இன்று பிரேத பரிசோதனை

    இதையடுத்து, இன்று காலை 11.30 மணிக்கு உடல்கூறாய்வு தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதன்பிறகு போலீஸ் தரப்பில், சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. சித்ரா கன்னத்தில் இருந்த காயம், அவர் தூக்குப் போட்டபோது வலியால் கையை உதறியதால் சித்ராவின் கை நகங்களால் ஏற்பட்ட காயம் என தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது வேறு யாரும் அடித்து இந்த காயம் ஏற்படவில்லையாம்.

    3 கோணங்கள்

    3 கோணங்கள்

    தற்கொலை, கொலை அல்லது தற்கொலை செய்ய தூண்டப் பட்டது என்ற மூன்று கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இதில் ஒரு கோணம் இப்போதைக்கு முடிவடைந்துவிட்டது. அதாவது கொலை இல்லை என தெரியவந்துள்ளது. ஆனால் தற்கொலை செய்ய காரணம் என்ன என்பது பற்றிய விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+