மின்தடைக்கு சில நாட்களில் தீர்வு... தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை... அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னை: தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிலக்கரி பிரச்சனைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடமாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் ஒரு மணிநேரம், 2 மணிநேரம் என மணிக்கணக்கிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

தமிழக அரசு மீது விமர்சனம்
இதனால் தமிழக அரசு மீது விமர்சனம் எழுந்தது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என விளக்கமளித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள மின்வெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாஜக குற்றச்சாட்டு
இருப்பினும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக பாஜக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அவர் கூறுகையில், ‛‛தமிழகத்தில் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மத்திய அரசை காரணமின்றி திமுக அரசு குற்றம்சாட்டுகிறது'' என்றார்.

எப்படியாவது தீர்வு காணுங்க...
மின்வெட்டு பிரச்சனையில் இப்படி அரசியல் நடக்கும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் எப்படியாவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் சில நாட்களில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இருக்கவே இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

நிலக்கரி வந்து சேரவில்லையே...
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார். அதன்பின் அவர் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும், நிலக்கரியும் வந்து சேராததே மின்சார பிரச்னைக்கு காரணம். தமிழகத்தின் மின் உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்ற நிலையில் குறைவான நிலக்கரி மட்டுமே கிடைக்கிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மலிவான விளம்பரம்
மின்தடை குறித்து பாஜக மாநில தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை தேடி வருகிறார். குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது. மின்தடை குறித்து பாஜக மாநில தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை தேடி வருகிறார். குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில்தற்போது ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளது.

சில நாட்களில் தீர்வு
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு இரண்டு மாத காலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது'' என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications