5,000 வேலை செய்யும்.. இனி காங்கிரஸில் கூட்டணி ஆட்சி கேட்க மாட்டார்கள்.. ஆர்.எஸ் பாரதி அதிரடி
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, கூட்டணி ஆட்சி என்று திமுகவுடன் போர் கொடி எழுப்பி தனி டிராக்கில் பயணித்து வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ஆர்.எஸ் பாரதி, கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக் கொள்வார் என பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. மிகவும் வலுவான கூட்டணியாக கருதப்பட்ட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பரபரப்பு நிலவி வருகிறது. பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் திமுகவிற்கு எதிரான கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள்.

இனி காங்கிரஸ் கேட்காது
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே, கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று பதில் அளித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகும் கூட பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் தொடர்ந்து கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நாளையில் இருந்து யாரும் கூட்டணி ஆட்சி என்பதை பற்றி பேச மாட்டார்கள். 5,000 கொடுத்த பிறகு மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கு தெரியும். கார்கே, ராகுல் காந்தி, செல்வப்பெருந்கை ஆகியோர்தான் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள்.
ராகுல் காந்தியே ஏற்பார்
இவர்கள் 3 பேர் கேட்டால் மட்டும் தான் பதில சொல்லுவோம். கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக் கொள்வார். எங்கள் தலைவரும் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே இனி யாரும் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த சிக்கலும் இருக்காது" என்றார்.
-
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications