ரஜினிகாந்த் முதல்வரானால் நான்.. ? பவருக்கு வர நினைக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனின் நையாண்டி பேச்சு
சென்னை: ரஜினிகாந்த் முதல்வரானால் என்னை துணை முதல்வராக்க வேண்டும் என பவர் ஸ்டார் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அண்மையில் நடந்த சிவகாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த விழாவில் பவர் ஸ்டார் பேசினார். அவர் பேசுகையில், நான் இந்த இடத்தில் இருப்பதற்கு ராதாரவிதான் காரணம். சினிமாத் துறையில் நடிக்க முடிவெடுத்த பின்னர் ராதாரவியிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது அவர் என்னை திட்டிவிட்டார்.

ஹீரோ
ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டேன். அப்போது நான் ஹீரோவாக நடிக்கிறேன் என சொன்னேன். நீ நகைச்சுவை நடிகராக ஆக வேண்டும் என சொன்னார். அப்போது ஏதோ பொறாமையில் சொல்கிறார் என நினைத்தேன். இவர் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கட்டும் என நினைத்துக் கொண்டு லத்திகா படத்தில் ஹீரோவாக நடித்தேன். அந்த படம் 400 நாட்கள் ஓடியது.

ராதாரவி
அதற்கடுத்து வில்லனாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்து ஆனந்த தொல்லை என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு ராதாரவியிடம் சென்றேன். ஏன் இப்படி நடித்து வீணாக போகிறாய் என திட்டினார். அதையும் நான் காதில் போட்டு கொள்ளவில்லை. ஒவ்வொரு படம் தொடங்கும் போதும் ராதாரவியிடம் சென்று திட்டு வாங்கிவிட்டுதான் நடித்தேன்.

கட்சி
என்ன சோதனை வந்தாலும் அதை சாதனையாக்குவதுதான் எனது எண்ணமாக இருந்தது. இதற்காக ரூ 40 கோடி வரை செலவிட்டுவிட்டேன். நடிகர் ரஜினிகாந்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அரசியல் கட்சியை அவர் சீக்கிரமாக தொடங்க வேண்டும். என்னை உங்கள் கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டும்.

துணை முதல்வர்
நீங்கள் முதல்வராகிவிட்டீர்கள் என்றால் என்னை துணை முதல்வராக நியமிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வாருங்கள் என பவர் ஸ்டார் கூறினார். இதை கேட்ட அங்கிருந்த ஆடியன்ஸ் கை தட்டி வரவேற்றனர். சிலர் ரஜினியையே கலாய்க்கிறாரே என ஆச்சரியமாக பார்த்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications