சென்னை மக்களே கவனம்.. இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உஸ்மான் சாலை, அத்திபட், பெசன்ட் நகர் உள்பட 6 இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னையில் தினமும் ஒவ்வொரு இடங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மின்வாரியத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக மின்தடை ஏற்படும் இடங்களில் விபரம் வருமாறு:

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 23.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை உஸ்மான் சாலை, அத்திப்பட், பெசன்ட் நகர், சிறுசேரி, நங்கநல்லூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
உஸ்மான் சாலை: பசூல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபியுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, ராமச்சந்தரா ஐயர் தெரு, ராஜாபிள்ளை தோட்டம், மாம்பலம்ஹைரோடு, கோடம்பாக்கம் ஹைரோடு, வடக்கு உஸ்மான் சாலை, ரெங்கராஜபுரம் பகுதி, அஜீஸ் நகர், அக்ரோபாத், பராங்குசாபுரம், சிஆர்பி கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை மற்றும் ஸ்டேஷன் வியூ சாலை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
அத்திபட்: ஐசிஃஎப் காலனி,ஸ்லம் போர்டு, செல்லியம்மன் கோவில் நகர்,செல்லியம்மன் நகர், அக்னி எஸ்டேட், எம்ஜிஆர் புரம், ஆவின் மெயின் ரோடு, இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முதல் ஆவின் பார்லர் வரை, வடக்கு பகுதி சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
பெசன்ட் நகர்: 7 வது அவென்யூ, ருக்குமணி சாலையின் ஒரு பகுதி, டைகர் வரதாச்சாரி சாலையின் ஒரு பகுதி, கங்கை தெரு ஒரு பகுதி, அருண்டல் கடற்கரை சாலையின் ஒரு பகுதி, கடற்கரைசாலையின் ஒரு பகுதிகளில் மின்விநியோகம் என்பது தடைப்பட உள்ளது.
சிறுசேரி - நங்கநல்லூர்: சிறுசேரி பகுதியை பொறுத்தமட்டில் சிறுசேரி ஊராட்சி, எல் & டி அடுக்குமாடி குடியிருப்பு, புதுப்பாக்கம் ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. அதேபோல் நங்கநல்லூர் பகுதியில் நேரு காலனி ஒரு பகுதி, 5வது மெயின் ரோட்டின் ஒரு பகுதி, 39 முதல் 42வது தெரு, கன்னையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலையின் ஒரு பகுதி, வேம்புலியம்மன் கோவில் தெரு, 4வது மெயின் ரோடு பகுதிகளில் ‛பவர் கட்' ஏற்பட உள்ளது.
செயின்ட் தாமஸ் மவுண்ட்: மீனம்பாக்கம் சுங்க அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, தபால் நிலையம், குமரன் நகர், ராஜீவ் காந்தி தெரு, விஓசி தெரு, அண்ணா தெரு, பராதியார் தெரு, மீனம்பாக்கம் முழு பகுதி, பாண்டியன் தெரு, விருதுநகர் ஹோட்டல், ஹோண்டா ேஷாரூம், பிஎம்டபிள்யூ ஷோரூம், குயின் சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், குளத்துமேடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications