சென்னை தாம்பரத்தில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் 5 மணிநேரம் ‛பவர்கட்’.. மக்களே கவனம்
சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக சென்னை தாம்பரத்தில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பிரச்சனையின்றி முறையாக மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகளை இந்த மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணி என்பது ஒவ்வொரு ஏரியாக்களிலும் வெவ்வேறு நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்களிலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அங்கு சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 28.08.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரத்தில் கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி தாம்பரத்தில் ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலை, ரங்கா காலனி பிரதான சாலை, நேதாஜி தெரு, காமராஜ்புரம் பிரதான சாலை, ஐயப்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications