சென்னையில் நாளை 5 மணிநேரம் மின்தடை.. ஊங்க ஏரியா இருக்கா? இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. எந்தெந்த ஏரியாக்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏரியாக்களிலும் மாதம் ஒருமுறை மின்பராமரிப்பு பணி என்பது நடத்தப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் என்பது நிறுத்தப்படும். அந்த வகையில் சென்னையில் சில இடங்களில் நாளை (ஜனவரி 25) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இந்த பணியின் காரணமாக சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 25.1.2025 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
டைடல் பார்க்: தரமணியின் ஒருபகுதி, கானகம், பெரியார் நகர், திருவான்மியூர் மற்றும் இந்திரா நகரின் ஒருபகுதி, எம்ஜிஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் மற்றும் கானகம்), வேளச்சேரியின் ஒருபகுதி, விஎஸ்ஐ எஸ்டேட்டின் பேஸ் 1, 100 அடி ரோட்டின் ஒருபகுதி, அண்ணா நகர், சிஎஸ்ஐஆர் ரோடு, ஆர்எம்இசட் மில்லேனியம் (கந்தன்சாவடி), சிபிடியின் ஒருபகுதி, அசென்டாஸ் மற்றும் டைட்ல பார்க், காந்தி நகர் மற்றும் அடையாரின் ஒருபகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
கிண்டி: கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கலின் முழுபகுதி, காந்தி நகர், பூந்தமல்லி ரோடு, ஜேஎன் சாலை, அம்பாள் நகர், லேபர் காலனியின் அனைத்து தெருக்கள், பிள்ளையார் கோவிலின் 1முதல்தெருக்கள், ஏ, பி, சி, டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு பேஸ், மவுண்ட் ரோட்டின் ஒருபகுதி, பாலாஜி நகர், பாரதியார் நகர், தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே மின்சாதனங்களை பயன்படுத்தி செய்ய வேண்டிய வேலைகளை முடித்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
-
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு! format செய்து பெங்களூரில் 2500 ரூபாய்க்கு விற்றது அம்பலம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications