தமிழகத்தில் மின்கட்டணம் அதிரடி உயர்வு.. 20 பைசா டூ ரூ.27 வரை உயர்வு! எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு?
சென்னை: தமிழகம் முழுவதும் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என்பது ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு அமலுக்கு வர உள்ளது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
தமிழகத்தில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 4.83 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான 400 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இதுவரை 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 வசூலிக்கப்பட்டு வந்தது. இனி யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் கூடுதலாக சேர்த்து ரூ.4.80 வசூலிக்கப்பட உள்ளது.
அதேபோல் 401 - 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15 ஆக இருந்தது. இது தற்போது ரூ.6.45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.18ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 601 -800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ9.20ல் இருந்து ரூ.9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 - 1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20ல் இருந்து ரூ.10.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1,000 யூனிட்டுக்கு மேலாக பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ரூ.11.80 வசூல் செய்யப்பட உள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் ஜுலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள், சிறு, குறு, தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் என்பது உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ வாட் மின்சாரம் ரூ.307 ஆக இருந்த நிலையில் இனி ரூ.322 வசூலிக்கப்படும். 112 கிலோவாட்டுக்கு மேல் ரூ.562 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.589 வசூல் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் 112 கிலோவாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.27 வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications