வீடுகளுக்கு விலக்கு.. தமிழகத்தில் மீண்டும் மின்கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாளில் (ஜூலை 1ம் தேதி) இருந்து மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் அளவுக்கு உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தான் மின்சாரத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஏதேனும் ஆணை வழங்கினாலும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வீடு, தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வழங்கி வருகிறது. மின்சார கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது.

இந்த ஆணையம் தான் மின்கட்டண உயர்வுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும். தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2022ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2022 செப்டம்பர், 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் அந்த நிதியாண்டு முதல்,2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
மேலும் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கியது. அதன்படி மின்கட்டண உயர்வு 6 சதவீதத்தை விட அதிகரிக்க கூடாது அல்லது ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில் எது குறைவோ அப்படி உயர்த்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 2023ல் 2.18 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. 2024ல் 4.18 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் நாளை மறுநாள் ஜூலை 1ம் தேதி வருகிறது. இதையடுத்து மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு மின்கட்டணம் 3.16 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண், 3.16 சதவீதமாக இருப்பதாக மத்திய அரசு மே மாதம் தெரிவித்தது. அதன்படி 3.16 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாம்.
அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு வீட்டு பயன்பாடு மின்சாரத்தில் ஒரு யூனிட்டிற்கு, 15 காசு முதல் 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்போது ஒருவர் ரூ.1000 மின்கட்டணம் செலுத்துகிறார் என்றால் அவர் வரும் மாதங்களில் கூடுதலாக ரூ.31.6 வரை செலுத்த வேண்டி இருக்கும். இது வீடு, தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைவருக்கும் பொருந்தும். இருப்பினும் வீட்டுக்கான மின்கட்டண உயர்வை அரசு ஏற்கும். அதன்படி மின்வாரியத்துக்கு அந்த தொகையை அரசே வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 4.83 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த முறை சற்று குறைவாக 3.16 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம் என்றாலும் கூட ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்துவது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டுமின்றி இந்த முறை கட்டணம் உயர்த்தப்பட்டால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022, 2023, 2024 ஆகிய 3 ஆண்டுகளை தொடர்ந்து இப்போது 4வது ஆண்டாக மின்கட்டணம் அதிகரித்தது என்று ஆகிவிடும்.
இதற்கிடையே தான் மின்கட்டண உயர்வு தொடர்பான செய்தி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார வெளியிடப்படவில்லை.
ஒழுங்குமுறை ஆணையத்தினால், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது எனவும், தற்போது வழங்கப்படும்100யூனிட்இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித ஒழுங்குமுறை ஆணையத்தினால், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு விலக்கு வழங்கி மற்றவற்கு கட்டணம் உயர்த்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications