Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாகரனின் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளனர்.. வெளியான பரபரப்பு வீடியோ! உடனே மறுத்த இலங்கை அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக மதிவதனியின் சகோதரி என அடையாளப்படுத்திக்கொண்டு ஒரு பெண்மணி வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் போரில் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்தது. ஆனால், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரோடு உள்ளதாக அவ்வப்போது சிலர் தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.

Prabhakarans wife and daughter are reported alive: Video creates sensation

சில மாதங்களுக்கு முன்னர் திடீரென செய்தியாளர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிரோடு உள்ளதாகவும் தேவையான நேரத்தில் அவர் வெளிப்படுவார் என்றும் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார் எனக் கூறியிருந்தார். இது இலங்கைத் தமிழ் மக்களிடையே பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

இந்நிலையில் டென்மார்க் நாட்டில் வசிக்கும் பெண்மணி ஒருவர் ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரரி தாரகா ஹரித்தரன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், "நான் தாரகா ஹரித்தரன். கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரில் எனது தங்கை மதிவதனியும், அவரது மகள் துவாரகாவும் இறந்துவிட்டதாக இலங்கை அரசு வெளியிட்ட ஊடக செய்திகளால் தெரிந்து கொண்டேன்.

கடந்த சில ஆண்டு காலமாக அவர்கள் உயிருடன் இருப்பதாக வந்த செய்தியை அறிந்து கொண்டேன். பின்பு அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உணவு அருந்திவிட்டு வந்துள்ளேன். இந்தச் செய்தியை மிகவும் மகிழ்ச்சியுடன் எனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே இந்த செய்தியை கடவுள் கொடுத்த கொடையாகவே நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இயங்கிவரும் தமிழ் ஈழ ஆதரவு இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தான் மதிவதனியையும், துவாரகாவையும் சந்தித்து அவர்களோடு உணவருந்தியதாக அவரது அக்கா தெரிவித்திருந்தாலும், இந்தச் சந்திப்பு எங்கு நடந்தது என்பது பற்றிய எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இந்த தகவலை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கேனல் நலின் ஹேரத், "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள செய்தி நகைப்புக்குரியது. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போலியான தகவலோடு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+