பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா! மாதம் ரூ.36 பிரீமியத்தில் 2 லட்சம் காப்பீடு! அசத்தல் திட்டம்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய தனிநபர்களுக்கு நிதி உதவி மற்றும் மருத்துவக் காப்பீட்டை வழங்குவதை நோக்கமாக கொண்டதுதான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டமாகும்.. இது மலிவு விலையில் ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறது. PMJJBY என்று சொல்லப்படும் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் சிறப்பியல்புகள் என்னென்ன? தெரியுமா?
நாடு முழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய தனிநபர்களுக்கு அத்தியாவசிய நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட காப்பீடு திட்டம்தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) திட்டமாகும்.

மருத்துவ காப்பீடு PMJJBY
ஆண்டுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. PMJJBY என்ற இந்த திட்டத்தின் பிரீமியம் மிகவும் குறைவாகும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டப்பலனை பெறுவதற்கு, வருடம் வெறும் ரூ.436 பிரீமியம் செலுத்தினால் போதும். அதாவது மாதத்துக்கு ரூ.36 என்ற அளவில் ப்ரீமியம் செலுத்தலாம். இதனால் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
காப்பீடு எடுத்திருப்பவர் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவரது நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்..
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
இந்த பணத்தை நாமினி பெற வேண்டுமானால், பாலிசிதாரரின் நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விண்ணப்பித்து, பாலிசிதாரரின் இறப்பு சான்றிதழ், மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்டவற்றை ஆவணமாக தந்தால் போதும். அடுத்த ஒரு மாதத்துக்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆவணங்களை சரிபார்த்து காப்பீட்டு பணத்தை வங்கி கணக்கில் அனுப்பிவிடும்.
வயது வரம்பு & விதிமுறைகள்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் சேர, 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.. எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, அஞ்சல் அலுவலகங்களில் தனிப்பட்ட அக்கவுண்ட் உள்ளவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ஆனால், பேங்கில் அக்கவுண்ட் செயல்பாட்டில் இருக்கும்படியும், ப்ரீமியம் எடுக்கும்போது போதுமான பணம் வங்கி கணக்கில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்..
முக்கியமாக, உங்களது வங்கி கணக்குடன் வங்கி கணக்கோடு ஆதார் நம்பரையும் இணைத்திருக்க வேண்டும். ஒரு வருட இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால், வருடந்தோறும் புதுப்பிக்க வேண்டும்.. அரசின் இந்த திட்டத்தில் காப்பீட்டு பிரீமியமாக டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு பெறலாம்.
ஒவ்வொரு வருடம் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கில் இருந்து வருடத்துக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும். அந்தவகையில், ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications