2 கேஸ் சிலிண்டர் இருக்கா? அப்ப சிக்கலாயிருமே? உங்க வீட்டுக்கே ஆபீசர்ஸ் வர்றாங்க! தமிழக அரசு அதிரடி
சென்னை: கேஸ் சிலிண்டர்கள் குறித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை எடுக்க போகிறது. இதுகுறித்து கூட்டுறவு துறைக்கும், உணவு வழங்கல் துறைக்கும் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. இதைத்தவிர 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர, புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு 2 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

ஆனால், மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையை வழங்கும் திட்டம் காரணமாக, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது.. எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன்பே, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பத்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
உரிமை தொகை: காரணம், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், விண்ணப்பிக்க துவங்கியதில் சில சிக்கல்கள் எழுந்தன.. புதிய கார்டு வழங்குவதில் எந்த பிரச்சினையும் எழவில்லையாம்.. ஆனால், 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் விண்ணப்பித்து விட்டார்களாம். அதாவது, ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து விடுகிறார்களாம்..
எனவே, விண்ணப்பிக்கும் எல்லாருக்குமே கார்டுகளை தந்துவிடாமல், தங்களுக்கு வந்து சேரும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்தார்கள்.. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வு செய்தார்கள்..
கேஸ் சிலிண்டர்கள்: அந்த வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்திருந்தனர்..
இந்நிலையில், தமிழக அரசு கூட்டுறவுத்துறைக்கு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது... அதாவது, சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கு, ரேஷனில் லிட்டர் மண்ணெண்ணெய், 15 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.. கார்டுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாநில அரசுகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.
மண்ணெண்ணெய்: ஆனால் தமிழகத்தில், 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 30 லட்சம் பேர் காஸ் இணைப்பு இல்லாமல் உள்ளதால், தலா ஒருவருக்கு, 5 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
அத்துடன் கடந்த 2021 ஏப்ரல் முதல் மாதம், 75.36 லட்சம் லிட்டரும், 2022ல் மாதம், 45.20 லட்சம் லிட்டரும், 2023ல், 27.12 லட்சம் லிட்டராகவும் குறைக்கப்பட்டது. அதற்கேற்ப கார்டுதாரருக்கு, 1 - 2 லிட்டரும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த வருடம் ஏப்ரல் முதல், 10.84 லட்சம் லிட்டராக மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டதால், ஒருவருக்கு 1 லிட்டர் கூட தர முடியவில்லை...
மத்திய அரசு: தமிழக மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
2.32 கோடி வீட்டு கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், மிகவும் ஏழ்மையில் உள்ள, 41 லட்சம் பேருக்கு பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருவரே, 2, 3 காஸ் இணைப்பு பெற்றிருப்பதால்தான், அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாக, தமிழக அரசு கருதுகிறது.
கார்டுதாரர்கள்: அதனால்தான், தமிழகத்தில் மண்ணெண்ணெய் வாங்கக்கூடிய கார்டுதாரர்களின் வீடுகளில், உண்மையிலேயே காஸ் இணைப்பு இல்லையா என்பதை ஆய்வு செய்யுமாறு, உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications