"கொள்ளை அழகு காசி"க்கு நன்றி.. மகிழ்ச்சி! விஷால் - பிரதமர் சாட்டிங்கில் நடுவே புகுந்த பிரகாஷ் ராஜ்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி- நடிகர் விஷால் இடையேயான ட்விட்டர் உரையாடலை நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் விஷாலை ஆரம்பத்தில் தனது பக்கத்து வீட்டு பையனை பார்ப்பது போல் இருப்பதாக கூறி அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். அவர் நடித்த படங்கள் சில தோல்வியில் முடிந்தது.
தற்போது நடிகர் விஷால், லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் லத்தி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. விஜய் நடிக்கவுள்ள தளபதி 67 படத்தில் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

விஷால்
இந்த படத்தில் விஷால் வில்லனாக நடிக்கக் கூடும் என தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் விஷால் அண்மையில் பிரதமர் மோடியை பாராாட்டி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காசிக்கு சென்ற போது சிறப்பான தரிசனம் கிடைத்தது. காசியை இந்த அளவுக்கு அழகாக மாற்றியமைக்கு நன்றி என குறிப்பிட்டு பிரதமர் மோடியை டேக் செய்திருந்தார்.

பிரதமர் மோடி
இதற்கு பிரதமர் மோடியும் பதில் கொடுத்திருந்தார். அந்த பதில் பதிவில் தாங்கள் காசியில் சிறப்பான அனுபவத்தை பெற்றதை அறிந்து மகிழ்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். மோடி- விஷால் ஆகியோருக்கு இடையே நடந்த இந்த உரையாடலை நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

ஷாட் ஓகே
அதில் விஷாலின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு "shot ok.. next" என கேட்டுள்ளார். அதாவது விஷாலும் மோடியும் நன்றாக நடிக்கிறார்கள் என குறிப்பிட்டு இந்த நடிப்பு ஓகே அடுத்த நடிப்புக்கு போகலாம் என விமர்சித்திருந்தார். பிரகாஷ் ராஜின் ட்வீட் வைரலாகி வருகிறது. இதற்கு விஷால் இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.

பாஜக நிர்வாகிகள்
பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக நிர்வாகிகளையும் பிரகாஷ் ராஜ் அவ்வப்போது விமர்சித்து வருவார். அந்த வகையில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு முதல் நிறைய விஷயங்களில் #justasking என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கேள்விகளை எழுப்பியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார். அது போல் வெளிநாடுகளிலிருந்து இந்திய சிறுத்தைதளை பிரதமர் மோடி மீட்டுள்ளார். அந்த வகையில் இந்தியாவில் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளில் தப்பி தலைமறைவாக வாழ்ந்து வரும் நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டோரை எப்போது இந்தியாவுக்கு கொண்டு வர போகிறீர் என கேள்வி எழுப்பியிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications