திடீரென சென்னை வந்த பிரசாந்த் கிஷோர்! நாளை விஜயுடன் மேடை ஏறி 20 நிமிடம் சம்பவம் .. உஷாராகும் திமுக
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கிடையே இன்று மீண்டும் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்த நிலையில் நாளை விஜயுடன் அவர் மேடை ஏற உள்ளது உள்பட பிற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார். கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. 2வது ஆண்டு தொடங்கி உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளார். 2026 ல் தமிழகத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலை குறிவைத்து அவர் பணியாற்றி வருகிறார். இப்போது தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் உள்பட பிற நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமனம் செய்துவிட்டார்.
மேலும் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் களநிலவரங்களை அறிந்து கொள்ளும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தேர்தல் வியூக வகுப்பாளர்களுடன் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் - விஜய் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொணடனர்.
அப்போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளுவது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் முக்கிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். பூத் கமிட்டி அமைப்பதன் முக்கியம், இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து செயல்படுவது உள்பட பல்வேறு விஷயங்களை பிரசாந்த் கிஷோர் ஆலோசனையாக விஜய்க்கு வழங்கி உள்ளார்.
ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அப்போது திமுகவுக்கு பிரசார வியூக வகுப்பாளராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர் தான். இதனால் தமிழக களநிலவரம் என்பது அவருக்கு தெரியும். இதனால் நடிகர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு என்பது திமுகவை கலங்க வைத்துள்ளது.
இப்படியான சூழலில் தான் இன்று திடீரென்று பிரசாந்த் கிஷோர் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரசாந்த் கிஷோர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரசாந்த் கிஷோரின் இந்த சென்னை வருகையின் பின்னணியில் நடிகர் விஜயும், தவெகவும் தான் உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை பூஞ்சேரியில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தான் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் சென்னையில் நடக்கும் ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர், நடிகர் விஜயுடன் ஒன்றாக மேடை ஏற உள்ளதாகவும், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பிரசாந்த் கிஷோர் 20 நிமிடம் வரை பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளதால் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும்? என்பது பற்றி பிரசாந்த் கிஷோர் அறிவுரை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தவெகவின் இந்த நடவடிக்கையை திமுக உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!












Click it and Unblock the Notifications