இது லிஸ்ட்லயே இல்லையே.. ஸ்டாலின் முடிவால் 'பிகே' ஷாக் - 'தோற்றால் நாங்க பொறுப்பல்ல'
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலால் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் கடும் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்படும் நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நாளுக்காக தான் அத்தனை கட்சிகளும் காத்திருக்கின்றன.
இந்த தேர்தலில், திமுகவிற்காக தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஆப்பிரிக்க கண்டம் வரை தெரிந்த ஒன்றே.

பின்னணி என்ன?
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் களமிறங்கி அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்து திமுக தலைமையிடம் அவ்வப்போது அறிக்கைகளை சமர்ப்பித்து வருகிறது ஐபேக். எந்த தொகுதியில் யார் போட்டியிட்டால் வெல்ல முடியும்? வேட்பாளர்களின் உண்மையான பின்னணி என்ன? எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் பின்னணி என்ன? என்ன வாக்குறுதி கொடுத்தால், அந்தந்த தொகுதிகளில் எடுபடும்? என்று இன்ச் பை இன்ச்சாக வேலை பார்த்து வருகிறது ஐபேக் டீம்.

லிஸ்ட் புறக்கணிப்பு
இந்த நிலையில், கடந்த மார்ச் 12 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில், பல தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயரைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறதாம் ஐபேக். காரணம், இவர்கள் கொடுத்த லிஸ்ட்டுக்கும், அறிவித்த வேட்பாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். ஏகப்பட்ட தொகுதிகளில், ஐபேக் கொடுத்த லிஸ்ட்டை புறக்கணித்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம்.

வாய்ப்பில்லை ராஜா
இதனால், பல தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று ஐபேக் சார்பில் தெரிவிக்கப்பட்டு போதும், திமுக தலைமை 'வாய்ப்பில்லை ராஜா' எனும் ரீதியில் பதில் அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, அந்நிறுவனம் அதிருப்தியில் உள்ளதாம்.

தோற்றால் கேட்கக் கூடாது
இத்தனைக்கும், ஐபேக் அளித்த லிஸ்ட்டை, ஸ்டாலின் அமைத்த கண்காணிப்பு குழுவும் ஆராய்ந்து, ஒப்புதல் அளித்த பிறகும், வேட்பாளர்கள் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 180 தொகுதிகளில் வெற்றி என்ற முயற்சியில் நிச்சயம் சரிவு ஏற்படும் என்றும், அப்படி சரிவு ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் ஐபேக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இத்தனைக்கும், ஐபேக் அளித்த லிஸ்ட்டை, ஸ்டாலின் அமைத்த கண்காணிப்பு குழுவும் ஆராய்ந்து, ஒப்புதல் அளித்த பிறகும், வேட்பாளர்கள் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 180 தொகுதிகளில் வெற்றி என்ற முயற்சியில் நிச்சயம் சரிவு ஏற்படும் என்றும், அப்படி சரிவு ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் ஐபேக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications