நீங்க ஆளும் கட்சியாக இருக்க பீகாரில் இருந்து வந்தவர் தானே காரணம்.. எ.வ.வேலுக்கு பாஜக கேள்வி
சென்னை: பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர் என அமைச்சர் எ.வ வேலு விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு பாஜகவின் நாரயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக தமிழக அரசு நேரடியாக குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரு மசோதா கிடப்பில் போடப்பட்டால் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம் என பேசி கருத்து மோதலுக்கு வித்திட்டார்.

இதுமட்டும் இன்றி தொடர்ச்சியாக பல விவகாரங்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கு இடையே மோதல் போக்கு உள்ளது. திராவிட மாடல் காலாவதியானது என்றும் ஆளும் திமுகவை சீண்டிய ஆளுநர், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தைக் கூட மறைமுகமாக விமர்சித்து இருந்தார். தமிழக முதல்வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறுநாளே பேசியிருந்தார்.
இப்படி பல விஷயங்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில் மூத்த அமைச்சர்களும் ஆளுநரின் கருத்தை விமர்சித்து பேசி வருகின்றனர். அந்த வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு கருணாநிதி நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக சாடி பேசினார்.
எ.வ.வேலு கூறுகையில், "பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர். மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்துள்ளதாகவும் அதனை திமுக அரசு எதிர்கொண்டு வெற்றிபெறும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஆளுநர் குறித்த திமுக அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது:- தமிழ் நாட்டிலிருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை. பீகாரிலிருந்து தான் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநர் கூட பீகாரிலிருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலும் சொல்லியிருக்கிறார். பீகாரிலிருந்து வந்த பிரஷாந்த் கிஷோரினால் தான் தமிழகத்தில் ஆளும் கட்சியாக, உங்களால் இப்படி பேசவே முடிகிறது" என்றார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications