இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா.. அப்படி சொல்லவே வெட்கப்படேறன்.. பிரேமலதா விஜயகாந்த்
தென்சென்னை அதிமுக வேட்பாளருக்காக பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Recommended Video

சென்னை: "அம்மா பெயரில் உருவான இந்த பகுதி கட்டிடங்களின் பெயரை கூட சொல்லாமல் சென்றிருக்கிறார் என்றால், இவர் எல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா? அவரை எதிர்கட்சி தலைவர்னு சொல்லவே நான் வெட்கப்படுகிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தென்சென்னை பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
தென் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் அதிமுக சார்பாக போட்டியிடுகிறார், அவரை ஆதரித்து கூட்டணி கட்சியான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கண்ணகி நகரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது வேட்பாளர் ஜெயவர்தன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். பொதுமக்களிடம் பிரச்சார வேனில் இருந்தவாறு பிரேமலதா பேசியதாவது:

எதிர்க்கட்சி தலைவரா?
இங்கு இருக்கக்கூடிய கண்ணகி நகர், எழில் நகர் இக்கட்டிடங்கள் எல்லாம் அம்மாவால் உருவானது. ஆனால் இங்கு வந்த ஸ்டாலின், பொறாமை காரணமாக இப்பகுதியின் பெயரை கூட சொல்லாமல் சோழிங்கநல்லூர் என்று பொதுவாக சொல்லிவிட்டு போயிருக்கிறாரே.. இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா? அப்படிபட்டவர் பெயரை சொல்ல நான் வெட்கப்படுகிறேன்

இலவச பட்டா
20 வருஷமா உங்களை பார்க்க வராமல் இப்போ வந்திருக்கிறது தேர்தலுக்காத்தான். ஆனால் ஜெயவர்தன் அப்படி இல்லை. தேர்தலில் ஜெயித்து வந்தால், 20 வருஷங்களுக்கு மேல் இப்பகுதியில் வசிப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.

உரிமைகள்
இந்த தொகுதியில் நமக்கு என்ன வேண்டுமோ அதனை நிச்சயமாக மோடியிடம் பேசி ஜெயவர்தன் கொண்டு வருவார். கண்ணகி நகர், எழில் நகர் பகுதிக்கு தேவையான அத்தனை உரிமைகளை மீட்டு வருவார். ஸ்டாலினின் கூட்டணி ரவுடியிசம் கூட்டணி, கட்டப்பஞ்சாயத்து கூட்டணி, கடவுள் இல்லை என கூறும் கூட்டணி" என்று குற்றஞ்சாட்டினார் பிரேமலதா.

அதே தொனி
கடைசியாக அங்கிருந்து கிளம்பும்போது, அதனால ஸ்டாலினுக்கு நீங்கள் நல்ல பாடத்தை கற்று தருவீர்களா? சாதனை வெற்றியை தருவீர்களா? அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? என்று இதற்கு முன்பு நாம் தமிழத்தில் கேட்ட அதே தொனியில் பொதுமக்களிடம் கேள்விகளை எழுப்பி எழுப்பி வாக்கு கேட்டுவிட்டு சென்றார் பிரேமலதா!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications