சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரச்சாரத்தில் கலக்கும் பிரேமலதாவுடன் கூடவே வருகிறாரே.. அவரை கவனிச்சீங்களா!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்துடன் துணைக்கு செல்லும் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி

    சென்னை: அரசியலில் ஒரு புது ஜோடியின் நடமாட்டம் அடிக்கடி கண்ணில் படுகிறது.. அது வேறு யாருமில்லை.. பிரேமலதாவும், சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியும்தான்!

    கிடைச்சது என்னவோ வெறும் 5 சீட்கள்தான்.. ஆனால் அந்த 5 தொகுதிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் பிரேமலதா பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது.

    விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை. அதனால் வர முடியவில்லை. மகன் வாயை திறந்தாலே நமக்கு பயமாக இருக்கிறது. அதனால் ஒட்டுமொத்த கட்சிக்காகவும், பிரச்சார பீரங்கியாக பிரேமலதா களம் இறங்கி உள்ளார்.

    எல்லாரும் பிரச்சாரத்துக்கு போய்ட்டாங்க.. விஜயகாந்த் வீட்டில் தனியா என்ன பண்ணிட்டிருக்கார் தெரியுமா எல்லாரும் பிரச்சாரத்துக்கு போய்ட்டாங்க.. விஜயகாந்த் வீட்டில் தனியா என்ன பண்ணிட்டிருக்கார் தெரியுமா

    மெனக்கெடுகிறார்

    மெனக்கெடுகிறார்

    சர்ச்சை பேச்சுகள் பேசினாலும், பிரச்சாரத்திற்காக நிறையவே மெனக்கெடுகிறார். இந்நிலையில், அவருக்குத் துணையாக தம்பி சுதீஷின் மனைவியும் உடன் செல்கிறார்.

    சசிகலா

    சசிகலா

    அன்று இப்படித்தான் ஜெயலலிதாவுக்கு உற்ற உடன் பிறவா சகோதரியாக சசிகலா பிரச்சாரங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் செல்வார். ஜெயலலிதாதான் பேசுவாரே தவிர, சசிகலா ஒரு வார்த்தைகூட அப்போதெல்லாம் பேசியதே கிடையாது. அவரது குரல் கூட தமிழகத்துக்கு பரிச்சயம் இல்லை. ஆனாலும், ஜெயலலிதாவுடனேயே இறுதிவரை அந்த பயணம் நீடித்தது!

    வரவேற்பு

    வரவேற்பு

    அதுபோலவே, இன்று பிரேமலதாவுக்கு தம்பி மனைவி துணைக்கு செல்கிறார். சுதீஷீக்கு கூட துணைக்கு செல்லாமல் பிரேமலதாவுக்காவே அவர் துணையாக செல்வது தேமுதிகவினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

    பலம்தான்

    பலம்தான்

    எப்படியும் பிரேமலதாதான் பேசி பேசியே வாக்கு சேகரிப்பார் என்றாலும், பலம் வாய்ந்தவர்கள் உடன் இல்லாத நிலையில், சுதீஷின் மனைவி பிரேமலதாவுடன் செல்வது நிச்சமாய் பேருதவியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது!

    English summary
    Premalathas campaigns with LK Sudheeshs wife Poorna Jothi gives strength to the DMDK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X