ஆஹா.. அரசியல் கணக்கு மாறுதே! ’அண்ணன்’ ஸ்டாலின்.. பாசத்தோடு அழைத்த பிரேமலதா? எடப்பாடிக்கு ஸ்கெட்ச்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருக்கும் நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் ஸ்டாலினை அண்ணன் என குறிப்பிட்டுள்ள பிரேமலதா, திமுக ஆட்சிக்கு 50க்கு 50 மதிப்பெண்கள் தருவதாக கூறி இருக்கிறார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதம் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையை தொடங்கி விட்டன. இந்த 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நிலவும் சூழலில் திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது. 2019 தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கூட்டணி தொடர்கிறது.

AIADMK DMK DMDK

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணியே அபார வெற்றி பெற்றது. இதனால் 2026 தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, மஜக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. மேலும் சிறு சிறு அமைப்புகள், கட்சிகள் திமுகவுக்கு ஆதரவாக இருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக செயலாற்றி வருகிறார். இதுவரை அடுத்தடுத்து இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்ததில்லை, அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற வரலாற்றை தொடர வைக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார். ஆனால் கூட்டணி தான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே அதிகார பூர்வமாக இருக்கிறது. மற்றபடி கடந்த காலங்களில் அதிமுக பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக இதுவரை தங்கள் நிலைப்பாட்டை கூறவில்லை.

இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருக்கிறது. மக்களவை சீட்டு தருவதாக உறுதி அளித்து கடிதம் தரப்பட்டதாகவும் நாகரீகம் கருதி அதனை வெளியிடவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டுக்கு பிறகு தான் கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியை பலவீனம் அடையச் செய்ய அந்த கட்சியை தங்கள் கூட்டணிக்கு அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என திமுக தலைமை விரும்புகிறது.

அதற்கேற்றார் போல் தான் பிரேமலதா விஜயகாந்த் செயல்பாடுகளும் இருக்கிறது. விஜயகாந்த் இருந்தவரை திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்த நிலையில், தற்போது பிரேமலதா திமுக மீது ஒரு சாஃப்ட் கார்னர் கொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்திருந்தார் பிரேமலதா. அப்போது இருந்து தேமுதிக திமுக கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமாகி இருக்கிறது.

இந்நிலையில், ஸ்டாலினை அண்ணன் என கூப்பிட்டு ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் பிரேமலதா. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியை முன்னிட்டு பேசிய அவர்," சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அண்ணன் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு சரி செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண் அளிப்பேன் எனக் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் பிற கட்சிகளும் திமுகவை நோக்கி நகர ஆரம்பித்து இருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+